அனிருத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அளித்து இருக்கும் பரிசு ரசிகர்களை கொஞ்சம் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் இவர் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து இருந்தார்.
Ippo thaan Urupadiya oru vela senju irruka 👍👌
— Rocky bhai (@Rockyy__420) September 4, 2023
Waiting for #Leo @anirudhofficial Bro 😍❤️ pic.twitter.com/SlRh9UgjmL
அதற்கேற்ப நெல்சனின் முந்தைய படமான விஜயின் பீஸ்ட் படமும் படு தோல்வி அடைந்து இருந்தது. இதனால் நெல்சனும் கதைக்களத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். மேலும், பல முயற்சிக்கு பின் ரஜினியின் “ஜெயிலர்” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது.
ஜெயிலர் படம்:
மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த பாடம் வசூலை வாரி குவித்து வருகிறது.
Deserves 50% of the box office collection imo
— ♔ (@balltamperrerr) September 4, 2023
இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது வார முடிவில் 525 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக மீண்டும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏற்கனவே ரஜினி நடித்த 2.0 திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது 500 கோடி வசூலை கடந்த ரஜினி படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ஜெயிலர் திரைப்படம். இந்த வெற்றியை தொடர்ந்து ரஜினிக்கு ஜெயிலர் லாபத்தில் இருந்து ஒரு தொகையும் bmw காரையும் வழங்கியது சன் பிக்சர்ஸ். மேலும், நெல்சனுக்கும் ஒரு காசோலையும் ஒரு Porsche காரும் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால், படத்தின் பலமாக இருந்த அனிருத்திற்கு எந்த பரிசும் வழங்கவில்லை.
இப்படி ஒரு நிலையில் அனிருத்திற்கு காசோலை ஒன்றை வழங்கி இருக்கிறார் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் அனிருத்துக்கு கொடுக்கப்பட்ட இந்த பரிசை கண்டு ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்து உள்ளனர். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே அனிருத்தான், அனிருத் இல்லனா படமே இல்ல அவருக்கு படத்தின் லாபத்தில் இருந்து பங்கே கொடுக்காமல். அவருக்கும் ஒரு கார் பரிசு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.