தற்போது உள்ள இளைஞர்களின் இசைக்கு நம்ம அனிருத் தான் ட்ரெண்ட் . தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அனிருத் ரவிச்சந்திரன். இவர் தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் திரை உலகில் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு உள்ளார். 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.
இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் என்றாலும் சரி அனைத்துமே ஹிட் தான். அதன் பிறகு இவர் பல படங்களில் தன்னுடைய திறமையை காண்பித்து வந்தார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் அனிரூத் அவர்கள் இசை அமைத்து இருந்தார்.
இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் சும்மா கிழி என்று சொல்லும் அளவிற்கு பட்டைய கிளப்பியது. இந்நிலையில் அனிரூத் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கீபோர்டு வாசிக்கும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 8 வருடத்திற்கு முன்னால் அனிரூத் அவர்கள் திருமண கச்சேரி ஒன்றில் கீபோர்டு வாசித்து உள்ளார்.
தற்போது இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அதில் இந்த வீடியோவை உருவாக்கிய நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகள். இந்த வீடியோ என் மனதை மிகவும் கவர்ந்து உள்ளது என்று மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது நம்ம ராக் ஸ்டார் அனிருத்தா?? என்ற ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள படம் மாஸ்டர். இந்த படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அதனை தொடர்ந்து இவர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். அதோடு சில படங்களில் இசை அமைக்க கமிட் ஆகி உள்ளார்.