இந்த விருதை அவருக்கு கொடுத்து இருக்கலாம்..! மேடையில் அனைவரையும் உருகவைத்த அனிருத்

0
989
Anirudh

விஜய் டிவியில் 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ‘விஜய் அவார்ட்ஸ் ‘ விருது வழங்கும் விழா நடைபெற்று வந்தது . கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத இந்த விழா நேற்று (ஜூன் 3) சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு சினிமா பிரபலங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

ANDROID

இந்த விழாவில் சிறந்த பாடகருக்கான விருதை இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத்திற்கு வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் மெல்லிசை என்றாலும் சரி, தர லோக்கல் பாடல்கள் என்றாலும் சரி அதனை தாறு மாறாக பாடி அசத்தி விடுவார்.

இந்நிலையில் நேற்று சிறந்த பாடகர் என்று விருதை பெற்ற அனிருத் இந்த விருதை எனக்கு அளித்ததற்கு பதிலாக பாடகர் கானா பாலாவிற்கு அளித்திருக்கலாம் என்று பெருந்தன்மையாக கூறியுள்ளார். இந்த விருது வாங்கி கொண்டு பேசிய அனிருத் “இந்த விருதை நான் சிறந்த பாடகர்கள் என்று தேர்வான அணைத்து பாடர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்

gana bala

இந்த விருதை எனக்கு அளித்ததற்கு பதிலாக ‘என் வீட்டு குத்து விளக்கு’ என்ற பாடலை பாடிய கானா பாலாவிற்கு அளித்திருக்கலாம் ” என்று மிகவும் பெருந்தன்மையாக கூறியுள்ளார். சிறந்த பாடகர் லிஸ்டில் “மேயத மான்” படத்தில் கானா பாலா பாடிய ‘என் வீட்டு குத்து விளக்கு’ என்ற பாடலும் தேர்வாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.