தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிரூத். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் ரஜினிகாந்தின் உறவினார் ஆவார். இவர் தந்தை ரவி ராகவேந்திரர் பிரபல நடிகர் ஆவார். மேலும், தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த மூன்று படத்தின் மூலம் தான் அனிருத் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலே இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன்,தனுஷ், சூர்யா என பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது அனிருத் அவர்கள் விஜய்யின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் என்ற படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இதை அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் 2 படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
அனிருத் திரைப்பயணம்:
இது தவிர இவர் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அனிருத்திற்கு தற்போது 35 வயதாகிறது. இருந்தும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதோடு இவர் பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலுமே அனிருத் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய இசையில் தான் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சன் பிக்சர்ஸ் மற்றும் சன்நெட்வெர்க்கின் தலைவர் கலாநிதிமாறனின் மகள் காவியா மாறானை தான் அனிருத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அனிரூத் காதல்:
இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியானது தொடர்ந்து இவர்கள் திருமணம் உறுதியாக விட்டதாக கூறப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இவர்களுடைய திருமணம் உறுதியான செய்தி தான் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங்காகி வருகிறது.
அதாவது, வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தான் இவர்களுடைய திருமணம் நடக்க இருப்பதாக
கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதல் செய்வதாகவும் இருவருமே வெளிநாடுகளில்
ஒன்றாக சுற்றுவதாகவும், டின்னர் டேட் சென்றதாகவும் செய்திகள் வெளிவந்தது.
View this post on Instagram
திருமண அப்டேட்:
பொதுவாக இந்த மாதிரி வதந்திகளுக்கு அனிருத் முற்றுப்புள்ளி வைத்து விடுவார். ஆனால், இந்த முறை அவர் பெரிதாக எந்த ஒரு கருத்துமே சொல்லவில்லை. இதுதான் ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வத்தையே தூண்டி இருக்கிறது. அதோடு இன்னொரு சுவாரசியமான ட்விஸ்ட் இருக்கு. அது ரஜினிகாந்த் தான். அனிருத், ரஜினிக்கு உறவினர். இன்னொரு பக்கம் கலாநிதி மாறனுக்கும் ரஜினிகாந்த்துக்கும் இடையே பல சகாப்த கால நட்பு இருக்கிறது. இந்த இரண்டு பெரிய குடும்பங்களையும் இணைப்பதற்காக ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு வீட்டிலும் கிரீன் சிக்னல் கொடுத்ததாகவும் அதிகாரப்பூர் அறிவிப்பு மட்டும் பாக்கி என்றும் கூறப்படுகிறது. உண்மையிலேயே இவர்கள் திருமணம் நடக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்






