ஹீரோவாக நடிக்க போகிறாரா அனிருத் ? அட அவரே பதில சொல்லிட்டாரு பாருங்க.

0
1524
Anirudh
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு உள்ளார். தற்போது அனிருத்தும், நடிகர் தனுஷும் இணையப் போகிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் ஆரவாரம் செய்து வருகிறார்கள். கோலிவுட் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளர்களில் அனிருத்தும் ஒருவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்பார்” படத்திற்கு இவர் தான் இசை அமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், தர்பார் படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. தர்பார் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் உலக நாயகன் கமலஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திற்கும், தளபதி விஜயின் ‘தளபதி 64’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அதோடு அனிருத் தல அஜீத்தின் வேதாளம் மற்றும் விவேகம் என்ற இரண்டு படத்திற்கும் இசை அமைத்து உள்ளார். இப்படி சினிமா உலகில் இருக்கும் பிரபல நட்சத்திரங்களுடன் படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அனிருத் அவர்கள் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “3” என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் காலடி பதித்தார்.

- Advertisement -

அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். இதனைத் தொடர்ந்து “வேலையில்லா பட்டதாரி, தங்கமகன், மாரி என பல படங்களில் தனுஷுடன் இணைந்து அனிருத் பணியாற்றி உள்ளார். மேலும், இவர்கள் இருவரின் காம்போவும் வேற லெவல். அதுமட்டுமில்லாமல் இவர்கள் காம்போ ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், சமீப காலமாகவே இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் பணியாற்ற வில்லை என்ற தகவல் வந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் இவர்கள் பிரிந்து விட்டார்கள் என்று வதந்திகள் வந்தது.

-விளம்பரம்-

இதனால் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் ” தனுசு, அனிருத் காம்போ” மீண்டும் வருமா??என்று கேள்வி கேட்டார். அதற்கு அனிருத் கூறியது, கூடிய விரைவில் ‘நானும், தனுஷும் இணைய போகிறோம்’ என்று பதிலளித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் மிக உற்சாகத்திலும் ஆனந்தத்திலும் உள்ளார்கள் என்று தெரிய வந்து உள்ளது. அதோடு நீங்கள் படத்தில் ஹீரோவாக நடிப்பீர்களா?? என்றும் கேட்டு உள்ளார். அதற்கு அனிருத் கூறியது, ‘நான் இப்போது செய்யும் வேலையை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதனால் படத்தில் நடிக்க வர மாட்டேன்’ என்று கூறி இருக்கிறார். இப்படி ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பல சுவாரசியமான பதில்களை கூறியுள்ளார் அணிருத்.

Advertisement