தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் இசையமைப்பாளர்களில் சென்சேஷனல் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். 3 படம் துவங்கி தற்போது மாஸ்டர் படம் வரை அனிருத் எத்தனையோ ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார். மேலும், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று தமிழ் சினிமாவின் எத்தனையோ டாப் நடிகர்களின் படங்களில் இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை வைத்திருக்கிறார் அனிருத்.
இந்நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் தனது ஸ்டுடியோவில் அவர் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக தெரிகின்றது. சமீபத்தில் கூட ‘மாஸ்டர்’ படத்தின் பணிகள் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் நானும் என் பியானோவும் என்ற தலைப்பில் அவர் சில பாடல்களை தனது பியானோவில் வாசிப்பதை வெளியிட்டுள்ளார்.
இதையும் பாருங்க : நான் வேற மெட்டை போட்டு தரேன்னு சொன்னேன் எஸ் ஜே சூர்யா தான் வேண்டும் என்றார் – குஷி பாடலின் சீக்ரெட் சொன்ன தேவா.
மேலும், அந்த வீடியோவில் ‘நானும் என் பியானோவும். நாங்கள் இருவர் மட்டும்’ என்று கேப்ஷன் போட்டு இருந்தார். அனிருத்தின் இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் எக்கச்சக்க கமெண்ட்ஸ் போட்டு வந்த நிலையில் , சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கமன்ட் ஒன்றை போட்டிருந்தார்.
அதில் ‘இன்னொருவரும் இருக்கிறார் என்று நினைக்கிறேன் (ஒரு வேலை மனசுக்குள்ள இருக்கலாம்)’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அனிருத், நெல்சா ஒழுங்கா நடந்துக்க (Nelsaa Behave Yourself) என்று சற்று கட்டடமாக பதில் அளித்திருந்தார். இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலாமாவு கோகிலா படத்திற்கும், தற்போது இயக்கி வரும் டாக்டர் படத்திற்கும் அனிருத் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.