வனிதா விஜயகுமாரை தொடர்ந்து சின்னத்திரை சீரியலில் அனிதா சம்பத் என்ட்ரி ஆகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இதன் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா. அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.
மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத். மேலும், இவருக்கென்று சமூகவலைதளத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனால் சம்பத் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா:
பின் தொடர்ந்து இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். மேலும், இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. இதிலும் இவர் நீண்ட நாட்கள் நீடிக்க முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா. இந்த உலகத்தில் ஒரு பெண் சத்தமாக பேசவே முடியாது. இந்த உலகிற்கு எப்போதும் மென்மையாக சிரித்து பேசும் உலகிற்கு தான் பிடிக்கும்.
அனிதாவின் யூடியூப் சேனல்:
நாம் இந்த நவீன உலகத்தில் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம் என்று எல்லாம் புலம்பி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட இவர் தங்களின் புது வீட்டின் கிரகப்பிரவேசம் செய்து இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
அனிதா குறித்த தகவல்:
மேலும், இவர் வெள்ளித் திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் பட்டிமன்ற பேச்சாளராகவும் அனிதா கலக்கிக் கொண்டு வருகிறார். இப்படி அனிதா செம பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அனிதா சீரியலில் நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று மந்திரப்புன்னகை.
அனிதா நடிக்கும் சீரியல்:
இந்த தொடரில் அனிதா அவர்கள் ஹீரோயினி தோழியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருடைய சொந்த பெயரிலேயே இந்த சீரியலிலும் நடிக்கிறார். ஏற்கனவே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா விஜயகுமார் வெள்ளி திரை, சின்னத்திரை என கலக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்தபடியாக அனிதாவும் சீரியல், ரியாலிட்டி ஷோ என பிசியாக வலம் வருகிறார். ஆக மொத்தம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுடைய வாழ்க்கையே மாறிவிட்டது என்று தான் சொல்லணும்.