திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனிதா சம்பத்.

0
2360
anitha-sampath
- Advertisement -

சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி ஒருவர் தான் சன் தொலைங்கட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி ஷங்கர் பின்னர் சின்னத்திரை, சினிமா என்று வேற லெவலில் கலக்கி வருகிறார். அந்த வரிசையில் ஒரு செய்தியாளருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினார்கள் என்றால் அது அனிதா சம்பத்திற்கு தான என்று சொன்னால் அதற்கு ஈடில்லை.

-விளம்பரம்-

ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து.கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத். அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். இறுதியாக சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கி இருந்த காப்பான் படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தது . ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் இவரது திருமணம் திடீரென்று நடைபெற்றது. மேலும், திருமணத்திற்கு பின்னரும் செய்தி வாசிப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அனிதா சம்பத் திருமணத்திற்கு பின் தனது முதல் பிறந்தநாளை நேற்று (ஜூன் 12) கொண்டாடியுள்ளார். வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள அனிதா சம்பத் தனது அம்மா மற்றும் அப்பாவுடன் சேர்ந்து மிகவும் சிம்பிளாக கொண்டாடிய வீடியோ ஒன்றை தனது யூடுயூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், முதன் முறையாக தனது அம்மா மற்றும் அப்பாவை காண்பித்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement