நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் வாக்குகளை சேகரித்தும் வாக்காளர்களை கவரும் பல்வேறு வகையான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் .அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அனிதாவின் பெற்றோரிடம் கேளுங்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டது.

Advertisement


மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி சமூக நீதி நிலைநாட்டும் கட்சி,  மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது,. ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவன் (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே. என்றும் கமல் ரசிகன்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement