மேக்கப் இல்லதான். ஆனால், போன்ல பியூட்டி மோட ஆப் பண்ணுங்க. அஞ்சலியை கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்.

0
3051
anjali
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். மேலும், நடிகை அஞ்சலி முதல் படத்திலேயே மக்கள் மனதில் பிரபலமானார் என்று சொல்லலாம். நடிகை அஞ்சலி கொடுக்கும் கதாபாத்திரங்களில் திறமையாக நடிக்க கூடியவர்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு 2010 ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருடைய சினிமா உலகிற்கு தூக்கி விட்டது என்று சொல்லலாம். அதற்கு பிறகு தொடர்ந்து இவர் எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா, ரெட்டைசுழி, சேட்டை, வத்திக்குச்சி, இறைவி, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து உள்ளார். சமீப காலமாகவே நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருக்கிறது என்று பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த கற்றது தமிழ் படத்தில் பார்ப்பதற்கு நடிகை அஞ்சலி சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். பின் சினிமாவில் நுழைந்த சில ஆண்டுகளில் உடல் எடை கூட சற்று பருமனானார் அஞ்சலி. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது.

- Advertisement -

ஆனால், தற்போது கடும் உடற்பயிற்சிகளை செய்து ரொம்பவும் பிட்டாகா மாறி விட்டார் அஞ்சலி. நடிகை என்றாலே அவர்களுக்கு உடல் அழகு உள்ளவரை தான் அவர்களுக்கு மார்க்கெட், அதற்க்காக அவர் உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொண்டு பழைய நிலைமைக்கு மாறி விட்டார். குடும்ப பிரச்சினை காரணமாக சில காலமாக திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்து வந்தார் நடிகை அஞ்சலி. கடந்த ஆண்டு அஞ்சலி ‘சிந்துபாத், காண்பது பொய், பேரன்பு, லிசா, நாடோடிகள் 2 போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

பொதுவாகவே ரசிகர்கள் நடிகைகளை தேவதைகள், அழகி, பேரழகி என்று பல பெயர்களை வைத்து கூப்பிடுவார்கள். ஆனால், அவர்கள் நிஜ வாழ்க்கையில் பார்த்தால் சாதாரணமாக தான் இருப்பார்கள். அப்படி பல நடிகைகள் மேக்கப் இல்லாமல் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் என்று புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது நடிகை அஞ்சலியின் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை ரொம்ப சந்தோசமாக வெளியிட்டு உள்ளார். அதிலும் இவர் பார்ப்பதற்கு தேவதை போன்று தான் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள். தற்போது அஞ்சலி அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்

Advertisement