பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய இருக்கும் இவர் யார் தெரியுமா ? வெளியான உறுதியான தகவல் இதோ.

0
550
anjali
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன்காக அஞ்சலி செல்ல இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். அதோடு இவர் முதல் படத்திலேயே மக்கள் மனதில் பிரபலமானார் என்று சொல்லலாம். பிறகு 2010 ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருடைய சினிமா உலகிற்கு தூக்கி விட்டது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

அஞ்சலி குறித்த தகவல்:

சமீப காலமாகவே நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருக்கிறது என்று பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அதோடு சினிமாவில் நுழைந்த சில ஆண்டுகளில் உடல் எடை கூட சற்று பருமனானார் அஞ்சலி. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது கடும் உடற்பயிற்சிகளை செய்து ரொம்பவும் பிட்டாகா மாறி விட்டார் அஞ்சலி. மேலும், குடும்ப பிரச்சினை காரணமாக சில காலமாக திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்த அஞ்சலி மீண்டும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

ஃபால் வெப் தொடர்:

தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர் சி 15 படத்தில் அஞ்சலி கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண் நடிக்கிறார். மேலும், அஞ்சலி படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடரிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் தொடர் ஃபால். இதில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஃபால் வெப் தொடர் குறித்த தகவல்:

தற்கொலை முயற்சிக்கு பின் 24 மணி நேரம் நினைவில்லாத ஒரு இளம் பெண்ணின் கதையை மையப்படுத்தி இந்த ஃபால் தொடர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சித்தார்த் ராமசாமி தான் இந்த ஃபால் தொடருக்கு ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார். அஜேஷ் இசையமைத்திருக்கிறார். கிஷன் சி செழியன் படத்தொகுப்பை கையாண்டு இருக்கிறார். மேலும், அஞ்சலி நடிப்பில் இதற்கு முன்பு பாவ கதைகள் என்ற அந்தாலஜி என்ற படம் ஓடிடியில் வெளியாகி இருந்தது. அதற்குப்பின் தெலுங்கு ஓடிடியில் வெளியான தொடரிலும் கதாநாயகியாக அஞ்சலி நடித்து இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அஞ்சலி:

தற்போது இவர் தமிழில் உருவாகி இருக்கும் ஃபால் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடர் ‘வெர்டிஜ்’ எனும் கனடிய வெப் தொடரின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இந்த தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக அஞ்சலி அவர்கள் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Advertisement