பிரியங்காவிடம், நான் உங்களை தவறாக நினைத்துவிட்டேன் – மன்னிப்பு கேட்ட பிரபல VJ

0
11318
priyanka

விஜய் டீவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஜோடி நெ.1, கலக்கப்போவது யாரு என விஜய் டீவியில் உள்ள அனைத்து ரியாலிட்டி ஷோவையும் தொகுத்து வழங்கியவர் இவர்.

VJAnjana

இவருக்கும் ஜோடி நெ.1 நிகழ்ச்சியின் துணை இயக்குனராக இருந்த பிரவீன் என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்.19ஆம் தேதி திருமணம் ஆனது. தற்போது தனது இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் பிரியங்காவிற்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன் மியூசிக் சேனனில் வீ.ஜேவாக இருந்த அஞ்சனா ரங்கனும் பிரியங்கவிற்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், திருமண நாள் வாழ்த்திற்கு பதிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவிட்டார் அஞ்சனா. பின்னர் சுதாரித்துக் கொண்ட அஞ்சனா, சாரி டியர், இன்று உன் பிறந்தநாள் என நினைத்துவிட்டேன். திருமணநாள் வாழ்த்துக்கள். இருவரும் இணைந்து இன்னும் பல திருமண நாட்களை கொண்டாடுங்கள் என வாழ்த்தினார்.