கடைக்குள் வைத்து லாக் செய்த ஊழியர்கள் – போலீசில் புகார் அளித்த நடிகை. என்ன நடந்தது ?

0
284
anna
- Advertisement -

சிம் கார்டு வாங்க சென்ற நடிகையை கடைக்குள் வைத்து ஊழியர்கள் லாக் செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாளத்தில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் அன்னா ராஜன். மலையாளத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த அங்கமாலி டைரிஸ் என்ற படத்தில் அன்னா ராஜன் நடித்திருந்தார். இந்த படத்தை லிஜோ ஜோஸ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் லிச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் அன்னா ராஜன். இந்த படத்தின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதனை தொடர்ந்து இவர் ஐயப்பனும் கோஷியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் இவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அன்னா ராஜன் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவும் இருக்கிறார்.

- Advertisement -

அன்னா ராஜன் அளித்த புகார்:

இந்த நிலையில் தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது அன்னா ராஜன் ஆலுவா காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, புதிய சிம் கார்டு வாங்க கடைக்கு சென்று இருந்தேன். அப்போது தனியார் டெலிகாம் நிறுவன ஊழியர்கள் என்னை அறையில் அடைத்து வைத்து பூட்டினார்கள். இதனால் அந்த தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரில் அன்னா ராஜன் சொன்னது:

இதனை அடுத்து போலீசார் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது. அப்போது, புது சிம் கார்டு வாங்கும் இடத்தில் நடிகை அன்னா ராஜனுக்கும் அங்கிருந்த ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முத்தியதால் அன்னா ராஜனை அங்கிருந்த ஊழியர்கள் ஒரு அறையில் வைத்து பூட்டி இருக்கின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

பின் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் காவல்துறை விசாரணையும் நடத்தி இருந்தது. விசாரணை முடிவில் இரு தரப்பையும் அழைத்து சமரசம் பேச்சுவார்த்தை செய்து வைத்துள்ளனர். இதனை அடுத்து அன்னா ராஜன் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, நான் டூப்ளிகேட் சிம் கார்டு வாங்குவதற்காக அந்த டெலிகாம் நிறுவனத்திற்கு சென்றேன். நான் நடிகை என்பதை அவர்களிடத்தில் காண்பித்துக் கொள்ளவில்லை.

அன்னா ராஜன் அளித்த பேட்டி:

பின்னர் சிம் கார்ட் தொடர்பான பேச்சு வார்த்தை வாக்குவாதமாக எங்களுக்குள் மாறியது. அங்குள்ள ஊழியர்கள் என்னிடம் தகராறு செய்தார்கள். பின் அவர்கள் என்னை உள்ளேயே வைத்து கதவையும் மூடிவிட்டார்கள். பின் நான் புகார் அளித்த நிலையில் அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள். அதனால் நான் புகாரை திரும்பி பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement