ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘அண்ணா’. தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதை தான் இந்த சீரியல். இந்த வாரம் சௌந்தரபாண்டி, தீபாவளிக்காக கோவிலில் இலவசமாக வேட்டி சேலை கொடுத்து இருந்தார். அப்போது கோவிலுக்கு வந்த சண்முகத்தை பார்த்த சௌந்தரபாண்டி, ‘என்னால உனக்கு வேட்டி வேண்டுமா?’ என்று கேட்க, ‘ஆமாம்’ என்று சண்முகம் சொல்கிறார்.
உனக்கு வேட்டி மட்டுமில்ல ஜட்டியும் தான் நான் தரணும் என்று நக்கலாக சௌந்தரபாண்டி பேசி இருந்தார் . உடனே சண்முகம், சௌந்தரபாண்டியின் வேட்டியை உருவி அண்டராயருடன் நிற்க வைத்தார். அடுத்து ஜட்டி தரேன்னு சொன்னிங்களே எடுத்துக்கவா? என்ற சண்முகம் கேட்க, அங்கு இருந்து சௌந்தரபாண்டி எஸ்கேப் ஆனார். அதற்கு பிறகு வீட்டுக்கு வந்த சண்முகத்தை பார்த்து பரணி, நீ பண்றது எல்லாம் இசக்கியை தான் பாதிக்கும் என்றார்.
அண்ணா சீரியல்:
பின் வீட்டுக்கு வந்த சௌந்தரபாண்டியை பார்த்து இசக்கி சிரிக்க, இதற்கெல்லாம் காரணம் உன் அண்ணன் தான் என்று இசக்கி மீது சௌந்தரபாண்டி, மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்த போனார். நேற்று எபிசோடில், சிவபாலன் மாஸாக என்ட்ரி கொடுத்து தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்தார். இதனால் சௌந்தரபாண்டிற்கும் சிவபாலனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது பாக்கியம் அங்கே வர, இசக்கி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
நேற்றைய எபிசோட்:
பின் அவர், சிவபாலனிடம் சீம் எண்ணெயை கொண்டு வரச் சொல்லி நான் சொல்றதை அப்படியே எழுது என சொல்கிறார். பாக்கியம், என் புருஷனும் அவர் அக்காவும் சேர்ந்து செய்த கொடுமையால் நான் சீம் மண்ணை ஊத்தி கொளுத்திக் கொண்டேன். அதோடு என் புருஷனையும் அவங்க அக்காவையும் கொளுத்திட்டேன் என்று சொல்லி அவர்கள் மீது எண்ணெயை ஊற்ற, சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா அதிர்ச்சி அடைந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோடில், இசக்கி பாக்கியத்திடம் இனிமேல் இந்த வீட்ல இருக்க வேண்டாம், வீட்டை விட்டு போய்விடலாம் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியம், சாப்பாட்டுல கல் இருந்தால் கல்லை தூக்கி போட்டுவிட்டு சாப்பிடுவோம் அப்படி தான் அவங்களையெல்லாம் நம்ம கண்டுக்க கூடாது என இசக்கிக்கு ஆறுதல் சொல்கிறார். அதைத்தொடர்ந்து வெங்கடேஷ் ரத்னாவிடம் ஸ்கூலை தனது குழந்தைக்கு எழுதிக் கொடுக்க சொல்கிறார். அதற்கு ரத்னா மறுக்க, வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என்று வெங்கடேஷ் மிரட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சிவபாலன் அக்காவுக்கு விஷயத்தை சொல்லிவிடலாம் என சொல்ல, பாக்கியம் தடுக்கிறார். அதன்பின் பரணி, சண்முகத்திடம் போட்டியில ஜெயிக்கணும்னா என் அப்பாவோட வேட்டி உருவனா மட்டும் போதாது என்று ரொமான்ஸ் ஆக பேச, சண்முகம் நான் கந்த சஷ்டி விரதம் என தள்ளி போகிறார். பின், உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரேன்னு பாரு என பரணி சபதம் எடுக்க, மறுநாள் காலையில் சண்முகத்தை கட்டி பிடித்தபடி கீழே படுத்து இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.