ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று அண்ணா. தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதை தான் இந்த சீரியல். பல போராட்டங்களுக்கு பின் சண்முகம் தன் பெரிய தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறார். சண்முகம்-பரணி இடையே பாசம் மலர்கிறது. மேலும், கடந்த வாரம் எபிசோடில் சண்முகம்- பரணி இருவரும் ரத்னாவின் வீட்டிற்கு சென்று இருந்தார்கள். ரத்னாவின் நடவடிக்கையை சண்முகம் கவனிக்கிறார்.
இதனால் ரத்னாவுக்கு பிரச்சனை இருப்பது போல சண்முகத்துக்கு சந்தேகம் வருகிறது. பின் சண்முகம், அவளிடம் தனியாக பேசி உண்மையை தெரிந்து கொள்ள நினைக்கிறார். இதனால் ரத்னாவிடம் ரெஸ்ட் ரூம் எங்கே? என்று சண்முகம் கேட்க, உடனே வெங்கடேஷ், நான் கூட்டிட்டு போறேன் வாங்க என அழைத்துச் செல்கிறார். சண்முகத்தால் ரத்னாவுடன் பேச முடியாமல் போகிறது.
அண்ணா சீரியல்:
அதன் பின் எதுவும் பேசாமல் சண்முகம் மற்றும் பரணி கிளம்பி விடுகிறார்கள். அப்போது பரணி, ரத்னா என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை நீ கண்டுக்கவும் இல்லை. நீ ஒரு அண்ணனா மட்டும் இருக்க. தங்கச்சியா பொண்டாட்டியான வரும்போது பொண்டாட்டிய கண்டுக்கவில்லை என்று கோபப்படுகிறாள். இதனால் சண்முகம் அவளுக்கு மல்லிகை பூ வாங்கி கொடுத்து சமாதானம் செய்கிறார்.
சண்முகம்-பரணி:
பின் சண்முகம், உன்னை பீச்சுக்கு கூட்டிட்டு போறேன். லேட்டா வீட்டுக்கு போகலாம் என அழைத்துச் செல்ல இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கிறது. இன்னொரு பக்கம் பாக்கியம் மற்றும் இசக்கி கோவிலுக்கு போய் இருந்தார்கள். பின் இருவரும் வீட்டுக்கு வரும் போது வைகுண்டம் கொண்டு வந்த பலகாரங்கள் சிந்தி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார்கள்.
சௌந்தரபாண்டி சொன்னது:
உடனே அவர்கள், என்ன நடந்தது? என்று சௌந்தரபாண்டி இடம் கேட்க, உன் சொந்தக்காரனு சொல்லி ஒருத்தன் வந்தான். அவன் கொடுத்த பலகாரத்தை கீழே கொட்டி அவமானப்படுத்தி அனுப்பிட்டேன் என்று சொல்கிறார். ஆனால், யார் என்று தெரியாமல் இருவரும் குழம்புகின்றனர். கடைசியில் பரணி மற்றும் சண்முகம் வீட்டுக்கு வந்தார்கள்.
கோபத்தில் பரணி:
அப்போது கனியின் மூலமாக வைகுண்டம் அவமானப்பட்ட விஷயம் தெரிகிறது. உடனே கோபத்தில் சண்முகம், சௌந்தரபாண்டியன் வீட்டுக்கு கிளம்ப பார்க்கிறார். பரணி, அவனைத் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்கிறார். இருந்தும் சண்முகம் கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது. இனி என்ன அடுத்து நடக்கப்போவது? என்ற பரபரப்பில் அண்ணா சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.