அஜித்தின் திறமையை பாராட்டி அண்ணா பல்கலைக்கழகம் அளித்த கௌரவம்.! தல மாஸ் தான்.!

0
368
Ajith

நடிகர் அஜித் நடிப்பைத் தாண்டி புகைப்படக் கலை, பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் கைதேர்ந்தவர்.சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர்.

இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் அஜித் வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்தது. இதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆளில்லா ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டத்தில் 10 மாதங்களாக பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் நடிகர் அஜீத்குமார் கவுரவ பதவியில் ஆலோசகராகவும் பணியாற்ற வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

வரும் காலங்களில் விருப்பம் இருந்தால் கவுரவ பதவியில் தாங்கள் ஆலோசகராகவும் பணியாற்ற வேண்டும் என்றும் அஜித்திடம் தெரிவித்துள்ளது. ஆனால், அஜித் இதனை ஏற்றாரா இல்லையா என்று தான் தெரியாவில்லை.