கீர்த்தி, குஷ்பூ, மீனா, ரஜினிக்கு என்ன உறவு – இப்படி ஒரு ட்விஸ்ட்டை வைத்துள்ள சிறுத்தை சிவா.

0
4684
annathe
- Advertisement -

கோலிவுட் வட்டாரத்தில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறு மாறு தான். ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அண்ணாத்த படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதோ அந்த பட்டியல்,

- Advertisement -

ரஜினிகாந்த் — கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மீனா — கமலி என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தின் இரண்டாவது தங்கையாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

குஷ்பூ– கண்மணி என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தின் முதல் தங்கையாக நடித்துள்ளார்.

நயன்தாரா — நேஹா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியின் காதலியாகவும், ஜெகநாதனின் தங்கையாகவும் நடித்து உள்ளார்.

கீர்த்தி சுரேஷ் — கீர்த்தனா என்ற கதாபாத்திரத்தில் ரஜினிக்கு வளர்ப்பு தங்கையாக நடித்துள்ளார்.

ஜெகபதிபாபு — ஜெகநாதன் என்ற கதாபாத்திரத்தில் குஷ்புவின் கணவனாக நடித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் — சூரியபிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் மீனாவின் கணவனாக நடித்துள்ளார்.

வேலராமமூர்த்தி– காளையன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினியின் அப்பாவாக நடித்துள்ளார்.

சூரி– கதிர் என்ற கதாபாத்திரத்தில் ரஜினியின் வளர்ப்பு தம்பியாக நடித்துள்ளார்.

சதீஷ்– பிரதீப் என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷின் காதலியாகவும் பிரகாஷ்ராஜ் தம்பியாகவும் நடித்துள்ளார்.

மேலும் நடிகை மீனா அவர்கள் ஏற்கனவே ரஜினிகாந்தின் மகளாக, கதாநாயகியாக நடித்து இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் மீனா தங்கையாக நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து குஷ்புவும் ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் தங்கையாக நடித்துள்ளார். நயன்தாரா அவர்கள் வழக்கம் போல ரஜினியின் ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் கூட ரஜினி– நயன் ஜோடி குறித்து ரசிகர்கள் விமர்சித்திருந்தார்கள். மேலும், ஒவ்வொருவரின் கதாபாத்திரங்கள் குறித்து தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலவித விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Advertisement