தனது படத்தின் நாயகன் பெயரை குழந்தைக்கு வைத்த அண்ணாமலையின் வீடியோவை மோகன் ஜி பகிர்ந்து இருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இப்படி இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு படம் என்று ஒரு புறமும், இந்த படம் பிற்போக்கான படமாக இருக்கிறது என்று மற்றொரு புறமும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், இதையல்லாம் தாண்டி இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, நல்ல வசூலும் செய்து வருகிறது.இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம்.

Advertisement

இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதையாக இருந்தது. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ருத்ர தாண்டவம் படம் வெளியான போதே படத்தை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் பாஜக பிரமுகர்கள் இப்ராஹிம், எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்டோர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

அப்போது அண்ணாமலையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மோகன் ஜி ‘ ருத்ரதாண்டவம் திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் என் அலுவலகம் வந்து பார்த்து ரசித்து வாழ்த்திய தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு நன்றி’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மோகன் ஜி இறுதியாக ‘பகாசூரன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருந்தார்.

Advertisement

மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துஇருந்தார். சமூகத்தில் பெண்கள் பாலியில் தொழில் எப்படி சிக்குகிறார்கள், செல் போன்கல் மற்றும் சமுக வலைத்தளத்தினால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது போன்றவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார்.இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு படம் என்று ஒரு புறமும், இந்த படம் பிற்போக்கான படமாக இருக்கிறது என்று மற்றொரு புறமும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

Advertisement

ஆனால், இதையல்லாம் தாண்டி இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, நல்ல வசூலும் செய்து இருந்தது. இப்படத்தை தமிழ் நாடு முழுவதும் வெளியிட்டிங் GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் இயக்குனர் மோகன் ஜியை பாராட்டும் வகையில் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை வழங்கி இருந்தார். தற்போது மீண்டும் ரிச்சர்ட்டை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார் மோகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement