நீண்ட வருடங்களுக்கு பின் பேட்டி கொடுத்த அண்ணாமலை தொடர் ஐஸ்வர்யா.! இப்போ என்ன பண்றாங்க.!

0
4070
Aiswarya
- Advertisement -

தொலைக்காட்சி தொடர்களில் கொடி கட்டி பறந்த ஒரு சில நடிகர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. அந்த வகையில் அண்ணாமலை சீரியல் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமான சீரியல் நடிகை ஐஸ்வர்யா நீண்ட இடைவேளைக்கு பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

-விளம்பரம்-
ஐஸ்வர்யா

ஆரம்ப காலத்தில் டிவி தொடர்களில் மட்டும் நடித்து வந்த இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த தொடர்பு தான் அண்ணாமலை சீரியல். ராதிகா தயாரித்த இந்த தொடரில் ஐஸ்வர்யா ஒரு போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்து இருப்பார் அந்த கதாபாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது.

- Advertisement -

அண்ணாமலை தொடருக்குப் பின்னர் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில் ‘படத்தில் சினேகாவின் தோழியாகவும், டும்டும்டும் படத்தில் ஜோதிகாவின் தங்கையாகவும் நடித்து இருப்பார். அதன் பின்னர் ஒருசில பழங்களை சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய ஐஸ்வர்யா, ‘நான் நடிப்பை விட்டு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல இருக்கும். என்னை ஞாபகம் வச்சு பேட்டி எடுக்க வந்ததுக்கு நன்றி. திருமணத்துக்குப் பிறகு துபாய்க்குப் போக வேண்டிய சூழல்.

-விளம்பரம்-
ஐஸ்வர்யா

அதனால, நடிப்புக்கு பிரேக் எடுத்துட்டு துபாய் கிளம்பினேன். அப்புறம் எனக்கு பையன் பிறந்தான். அவனைப் பார்த்துக்க வேண்டி இருந்துச்சு. இப்போ என் லைஃப் ஸ்டைலே மாறிடுச்சு. இப்போது கனடாவில் ‘சூப்பர் சிங்கர்’ மாதிரி ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். தற்போது ஒரு எஃப்.எம்மில், ஆர் ஜேவாகவும் இருந்து வருகிறேன்.

Advertisement