கேலிக்கு உள்ளான நயன்-ரஜினி செல்பி – ஏன்னு பாருங்க(எப்படி தான் கண்டு புடிக்கிறாங்களோ)

0
68420
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான ‘அண்ணாத்தே’ பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாடலான ‘சார காற்றே’ என்ற பாடல் நேற்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த பாடலின் ஒரு புகைப்படத்தில் நயன்தாரா, ரஜினியுடன் எடுத்த செல்பி பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமே அந்த புகைப்படத்தில் செல்பி எடுக்கும் நயன்தாரா, செல் போன் கேமராவை மறைக்குபடி பிடித்துகொண்டு இருப்பதை சுட்டிகாட்டி, அந்த செல்பி புகைப்படத்தில் வெறும் நயன்தாரா கை மட்டும் தான் தெரிகிறது என்பது போல பல விதமான மீம்களை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-85-1024x602.jpg

ஏற்கனவே இந்த படத்தில் நயன்தாரா மற்றும் ரஜினியின் ஜோடிக்கு இடையில் இருக்கும் வயது வித்யாசத்தை சுட்டி காட்டி பலர் விமர்சனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மீனா, குஷ்பூ என்று பலர் நடித்து இருக்கையில் அவர்களுக்கு ஜோடியாக நடிக்காமல், தன் மகள் வயது பெண்ணோடு மீண்டும் ரஜினி ஜோடி சேர்ந்துள்ளதையும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

This image has an empty alt attribute; its file name is 2-19-1024x602.jpg

அதே போல சந்திரமுகி, குசேலன், சிவாஜி, தர்பார் போன்ற பல படங்களில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மீண்டும் மீண்டும் நயன்தாரா — ரஜினிகாந்த் ஜோடி சேருவது குறித்து சோசியல் மீடியாவில் பல்வேறு விதமான ட்வீட்டுகள் எழுந்து வருகின்றன.

Advertisement