விஜய் 63 யில் இணைந்த மற்றுமொரு இளம் நடிகை.! அனைவரின் பேவரைட் தான்.!

0
431
Vijay-63

சர்கார் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது ‘விஜய்63 ‘பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார். மெர்சல், தெறி படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயுடன் இணைந்துள்ளார் விஜய். 
ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

Indhuja

இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜயுடன் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

இதையும் படியுங்க : தர்பார் படத்தில் காமெடியன் யார் தெரியுமா.! ரஜினிக்கு முதற்கட்ட படப்பிடிப்பே அவருடன் தான்.! 

- Advertisement -

அதே போல இந்த படத்தில் மேயாதமான்,பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்த  இளம் நடிகை இந்துஜா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் கமிட் ஆகியிருந்தார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகை இந்துஜாவிற்கு ஒரு வித்யாசமான கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை இந்துஜா இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் கூட நடித்து விட்டாராம். விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement