ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இது தான்- உண்மையை போட்டு உடைத்த பத்திரிக்கையாளர் அந்தணன்

0
807
- Advertisement -

ஜெயம் ரவி- ஆர்த்தி விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகளின் விவாகரத்து குறித்த செய்தி தான் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமந்தா-நாக சைதன்யா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ்- சைந்தவியை தொடர்ந்து சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக பிரபலமான நடிகராக திகழ்கிறார் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதோடு தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக ஜெயம் ரவி-ஆர்த்தி திகழ்ந்து கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் தான் நடிகர் ஜெயம் ரவி சில வாரங்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து இது தொடர்பாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன்.

- Advertisement -

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து:

இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறி இருந்தார். இதை அடுத்து ஜெயம் ரவி- ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் பிரிந்தார்கள் என்றெல்லாம் பல செய்திகள் வருகிறது.

ஜெயம் ரவி பேட்டி:

மேலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் செய்யாதீர்கள். கெனிஷா 600 லைவ் ஷோக்கலில் பாடியவர். அவருடைய வாழ்க்கையில் சொந்தமாக கஷ்டப்பட்டு முயற்சி இந்த இடத்திற்கு வந்தவர். நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆசிரியர். நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களுடைய நோக்கமே. அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது என்று கூறியிருந்தார். இதை அடுத்து சோசியல் மீடியாவில் நெட்டிசன் ஒருவர், ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா? என்று கெனிஷாவிடம் கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

கெனிஷா பதிலடி:

அதற்கு கெனிஷா, நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? உங்களிடமிருந்து உங்களுடைய கேவலமான சிந்தனைகள் இடம் இருந்தும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்களே ஒரு பாதுகாப்பான நபர்தானா? என்று பதில் அளித்திருந்தார். இதை எடுத்து சிலர், ஆர்த்தி கொடுத்த டார்ச்சலினால் தான் ரவி விவாகரத்துக் கொடுத்தார் என்றும், சிலர் கெனிஷா-ரவி இடையே இருக்கும் உறவால் தான் இந்த பிரச்சனை தொடங்கியது என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டியில், ரவி- கெனிஷா சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வைத்து நிறைய கிசுகிசுக்கள் வெளியாகியிருந்தது.

அந்தணன் பேட்டி:

இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இது தொடர்பாக அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது கொஞ்சம் உண்மை என்பது போல தான் தெரிந்தது. இந்த பிரச்சனையில் ஆர்த்தி தான் நிறைய டார்ச்சர் செய்தார். அதனால் தான் ரவி வெளியே வந்துவிட்டார் என்று நானே சொன்னேன். ஆனால், இப்போது தான் விசாரிக்கும் போது பாடகி கனிஷா உடன் ரவிக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. இரண்டு பேருமே கோவாவுக்கு சென்று தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ரவி காரை கோவாவில் கெனிஷா தான் பயன்படுத்தியிருந்தார். இதை ஆர்த்தி தரப்பிலேயே சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி சொல்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. காரணம், தன்னுடைய தரப்பில் மட்டும் தவறில்லை, ரவி மேல் தவறு இருக்கிறது என்பதை காண்பிக்க தான் ஆர்த்தி இப்படி எல்லாம் செய்திருக்கிறார். இந்த விவகாரத்திற்கு குஷ்பு என்ன செய்தார்? ஆர்த்தி- ரவி காதலுக்கும், திருமணத்துக்கும் குஷ்பு தான் காரணம். ஆனால் இப்போது அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

Advertisement