என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு அதுதான் – இயக்குனரிடம் மேடையிலேயே மன்னிப்பு கேட்ட அனுபமா.

0
283
anupama
- Advertisement -

பட வெற்றி விழாவில் இயக்குனரிடம் நடிகை அனுபமா மன்னிப்பு கேட்டு இருக்கும் சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து இருந்த பிரேமம் படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
anupama-parameswaran

இந்த படத்தின் மூலம் தான் அனுபமா சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து இருந்தது. அதோடு இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான். பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடித்த கொடி என்ற படத்தில் அனுபமா நடித்து இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

அனுபமா திரைப்பயணம்:

தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நிறைய படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மலையாளத்திலும் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபமா தமிழில் சமீபத்தில் வெளியான தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து இருந்தார். அதுவும் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அனுபமா நடித்த படங்கள்:

இயக்குனர் ஆர் கண்ணன் இந்த படத்தை இயக்கி இருந்தார். தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த நின்னுக்கோரி திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் தள்ளிப்போகாதே என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அனுபமா நடித்த படம் ரவுடி பாய்ஸ். முற்றிலும் கல்லுரி கதை களத்தை மையமாக கொண்ட படம். இந்த படத்தை இயக்குனர் ஹர்ஷா கொனுகன்டி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஆந்திராவில் ஒரு மெடிக்கல் காலேஜில் படிக்கும் தமிழ் பெண்ணாக அனுபமா நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கார்த்திகேயா 2 படம்:

தற்போது அனுபமா அவர்கள் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அனுபமா நடிப்பில் வெளியாகி இருந்த படம் ’கார்த்திகேயா 2’. இந்த படத்தில் அனுபமாவுக்கு ஜோடியாக நிகில் நடித்திருந்தார். சந்து மொண்டேட்டி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.

இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட அனுபமா:

அப்போது மேடையில் பேசிய போது அனுபமா, இந்த படத்தின் சூட்டிங் குஜராத்தில் நடந்து கொண்டிருந்த போது எனக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு இருந்தேன். பின் அந்த ஷெட்யூலின் கடைசி நாளில் தொழில்நுட்பப் பிரச்னையால் படப்பிடிப்பு தடைபட்டது. இதனால் எனக்கு கோபம் வந்து விட்டது. இப்போது இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு அதுதான். இந்த படத்தில் சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனருக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

Advertisement