நான் ஒன்னும் அந்த பொண்ணு இல்ல – அட்வைஸ் செய்த ரசிகருக்கு கொடி பட நடிகை பதிலடி.

0
2456
anupamaa
- Advertisement -

தனக்கு அட்வைஸ் செய்த ரசிகருக்கு நடிகை அனுபமா பரமேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறது. நயன்தாரா துவங்கி, சாய் பல்லவி வரை பல்வேறு மலையாள நடிகைகள் தமிழ் சினியாவிலு ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு ஹெய்ந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா தான்.

-விளம்பரம்-

பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதில் நடித்த 3 கதாநாயகிகளுக்குமே சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்து கிடைத்து விட்டது. மேலும் அந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த அனுபமாவும் அதன் பின்னர் தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது தெலுங்கில் இவர் ஏகப்பட்ட பிஸியாக நடித்து வருகிறார்.அதே போல எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கு அம்மணி தினமும் ஒரு புகைப்படத்தையாவது பதிவிட தவறியதே இல்லை

- Advertisement -

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அதிலும் இந்த லாக் டவுன் சமயத்தில் படு மாடர்ன் உடைகளில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அம்மணி அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்திற்கு கீழே ரசிகர் ஒருவர் இதுபோன்ற அனுபமா பரமேஸ்வரனை நாங்கள் விரும்பவில்லை. கொடி மற்றும் பிரேமம் படத்தில் வந்த அனுப்ப பரமேஸ்வரனை தான் நாங்கள் விரும்புகிறோம் என்று பதிவிட்டிருந்தார்.

ரசிகரின் இந்த கமெண்ட் 500க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது. இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் இந்த கமெண்டுக்கு பதில் அளித்த நடிகை அனுபமா தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். உங்களின் எண்ணம் புரிகிறது. ஆனால் நான் மாலதியை (கொடி படத்தில் அனுபமாவின் பெயர் )அல்லது நிஜ வாழ்க்கையில் திருமணம் ஆன நபரும் இல்லை. அதனால் வாழ விடுங்கள் என்று பதிவிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து இதே கமெண்ட்டில் என்னுடைய கை கால்கள் உங்களை சங்கடபட வைத்தால் தயவுசெய்து ஒதுங்கி இருங்கள் சகோதர சகோதரிகளே என்று பதிவிட்டு இருக்கிறார். நடிகை அனுபமா தற்போது அதர்வா நடிப்பில் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்திருக்கிறார் அதே போல மலையாளத்தில் ஒரு நெட்பிளிக்ஸ் தொடர்களிலும் இவர் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement