ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளில் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்று இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் இவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவரது புகைப்படம் ஒன்று ஆசிரியர் தகுதி தேர்வு முடிவில் இடம்பெற்று உள்ளது.
பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதித் தேர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
இந்த தேர்வு முடிவில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவர் ஒருவரின் மதிப்பெண்பட்டியலில் , அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சையடைந்த ரிஷிகேஷ் குமார் தனது மதிப்பின் பட்டியலின் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் தேர்வு முடிவுகளில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது முதல் முறை அல்ல. இதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப்பட்டியல் வெளியானது. அதில் பிரபல ஆபாச நடிகையும் தற்போதைய பாலிவுட் நடிகையுமான சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.