பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இணைகிறார் பிரேமம் நடிகை – விவரம் இதோ

0
89
- Advertisement -

இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் ‘டிராகன்’ என்கிற படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் இணைகிறார் என்ற செய்தி தான் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம்தான் அனுபவமா சினிமா உலகுக்கு அறிமுகமாகி இருக்கிறார். மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில பழமொழிகளில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதோடு இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்துக்கு பின்னர் நம் அனைவரின் கவர்ந்தது நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான். பிரேமம் படத்தில் வெற்றியை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடித்த கொடி என்ற படத்தில் அனுபமா நடித்திருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

அனுபமா திரைப்பயணம்:

தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் இவர் நிறைய தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்தார். அது மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து தான் தள்ளிப் போகாதே, சைரன் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்திருந்தார்.

மீண்டும் தமிழில் அனுபமா:

இந்நிலையில்தான், ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துவின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’என்ற படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.இப்படத்தில் கே.எஸ் .ரவிக்குமார், மிஸ்கின், வி.ஜே. சித்து மற்றும் ஹர்ஷத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-

டிராகன் படம் :

சமீபத்தில் இந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது இதுவரை இதில் கதாநாயகியாக யாரும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த நிலையில் இப்போது அனுபமா இணைந்துள்ளார்.மேலும் இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ என்ற படத்திலும் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு வேலைகள் பாதி முடிவடைந்து விட்டன என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதீப் ரங்கநாதன் குறித்து:

தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா அவர்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து ‘லவ் டுடே’ என்ற ஹிட் படத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு படங்களுமே நிறைய விருதுகளையும் வாங்கியுள்ளது. தற்போது எல்.ஐ. சி மற்றும் டிராகன் படங்களில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement