மலையாள சினிமா தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறது. நயன்தாரா, அசின் துவங்கி சாய் பல்லவி வரை என பல்வேறு மலையாள நடிகைகள் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா தான். மேலும், பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அனுபமா நடித்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் இறுதியாக நடித்த படம் :
மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபமா தமிழில் சமீபத்தில் வெளியான தள்ளிப்போகாதே திரைப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் ஆர் கண்ணன் இந்த படத்தை இயக்கி இருந்தார். தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த நின்னுக்கோரி திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் தள்ளிப்போகாதே என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்.
ரவுடி பாய்ஸ் படம் :
அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். அதிலும் இந்த லாக் டவுன் சமயத்தில் படு மாடர்ன் உடைகளில் அனுபமா தனது புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் அனுபமா நடிக்கும் புதிய படத்தின் டிரைலர் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அனுபமா நடித்து உள்ள தெலுங்கு படம் ரவுடி பாய்ஸ். சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரெய்லர் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
முதல் முறையாக முத்தக் காட்சியில் அனுபமா :
பெரும்பாலும் படங்களில் இவருடைய கதாபாத்திரங்கள் அனைத்தும் ஓம்லியாகவே இருக்கும். இப்படி ஒரு நிலையில் தற்போது திடீரென தெலுங்கு படத்தில் லிப் கிஸ் காட்சியில் அனுபமா நடித்திருக்கிறார். அந்த டிரைலரில் நடிகை அனுபமா அவர்கள் முதன் முறையாக முத்தக் காட்சியில் அதாவது லிப்ஸ் கிஸ் காட்சியில் நடித்துள்ளார். இதை பார்த்த அனுபமா ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளார்கள். இந்த முத்த காட்சிக்காக பிரத்யேகமாக அவர் ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
அனுபமா வாங்கிய சம்பளம் :
முதலில் இதில் நடிக்க மறுத்த அவர் ரூ.50 லட்சம் தருவதாக சொன்னதும் ஒப்புக்கொண்டாராம். பிரபல தயாரிப்பாளரின் மகன் ஆதிஷ் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் தான் ரவுடி பாய்ஸ். முற்றிலும் கல்லுரி கதை களத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் ஹர்ஷா கொனுகன்டி இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தை வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிக்கிற தயாரித்துள்ளார். இந்த படம் சங்கராந்தி பண்டிகை முன்வைத்து திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவுடி பாய்ஸ் கதை:
தெலுங்கு படத்தில் தமிழ் பெண் கதாபாத்திரத்தில் அனுபமா நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆந்திராவில் ஒரு மெடிக்கல் காலேஜில் படிக்கும் தமிழ் பெண்ணாக அனுபமா நடித்திருக்கிறார். மேலும், மெடிக்கல் காலேஜ்– இன்ஜினியரிங் காலேஜ் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. பின் இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை. இதை தவிர இவர் மலையாளத்தில் ஒரு நெட்பிளிக்ஸ் தொடர்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.