தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். பொதுவாகவே தமிழ் சினிமாவிற்கு மலையாள சினிமாவில் இருந்து வந்த பல நடிகைகள் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார்கள். நயன்தாரா துவங்கி அசின், சாய் பல்லவி வரை என பல மலையாள நடிகைகள் தமிழ் சினியாவில் தூள் கிளப்புகிறார்கள். அந்த வகையில் இளம் நடிகையான அனுபமா பரமேஸ்வரனும் கலக்கி கொண்டு இருக்கிறார். மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இப்படத்தில் இவர் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதில் நடித்த 3 கதாநாயகிகளுக்குமே சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்து கிடைத்து விட்டது என்று சொல்லலாம். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமானார் அனுபமா.
கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் டோலிவுட் பக்கம் சென்று விட்டார். தற்போது தெலுங்கில் இவர் ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். எப்போதும் நடிகை அனுபமா சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவைத்து வழக்கம். இந்நிலையில் நடிகை அனுபமா புகைப்படத்தை மாபிங் செய்து தவறாக பயன்படுத்தி உள்ளார்கள்.அதுவும் அவரது முகநூல் பக்கத்தையே ஹேக் செய்து அதில் வெளியிடுன்னர் விஷமிகள்.
தற்போது இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை அனுபமாவின் புகைப்படத்தை மார்பிங் மூலம் மாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்த அனுபமா அவர்கள் அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு ‘இது பொய்யான புகைப்படம். எப்படி இது போன்ற தேவையில்லாத செயல்களை நேரம் ஒதுக்கி செய்கிறீர்கள்? எப்போதுமே இதே மாதிரி வேலைகளை தான் செய்து கொண்டு இருக்கீங்களா
உங்கள் வீட்டில் அம்மா, சகோதரி இல்லையா? உங்கள் மூளையை இது போன்ற முட்டாள்தனங்களுக்குப் பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமான விஷயங்களில் பயன்படுத்துங்கள். என்று கேள்வியும் கேட்டு உள்ளார். சமீபத்தில் கூட நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசு கிசு வந்தது. பும்ராவுடன் அனுபமா இணைத்து பேசப்பட்டதிற்கு காரணமே இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் பூம்ராவின் ஸ்டேட்டஸ் அனைத்திற்கும் டுவிட்டரில் லைக் செய்து வருகின்றார்.
அதேபோல் பூம்ராவும், அனுபமா புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார் என்று சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. தற்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக ‘தள்ளிப்போகாதே’ என்ற திரைப்படத்தில் நடிக்க வருகிறார்.