பாலிவுட் பட இயக்குனர் அனுராக் கஷ்யப் பகாசூரன் படத்தை பற்றி போட்டுள்ள ட்விட் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது செல்வராகவனை வைத்து பகாசுரன் படத்தை இயக்கி கடந்த 17ஆம் தேதி வெளியானது.
பிற்போக்கு கருத்துகள் :
இப்படம் அதிகமான எதிர்மறை கருத்துகளை கூறும் படமாக இருக்கிறது எனவும். பெண்கள் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என்றும், பெண்களையே அணைத்து சுமைகளையும் சுமக்க வேண்டும் என்று இயக்குனர் மோகன் ஜி இப்படத்தை இயக்கியிருக்கிறார். வெளிநாடு போல சென்னை மக்கள் மாறிவிட்டனர், பிள்ளைகள் ரூமுக்குள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும், ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியது தானே போன்ற வசனங்கள் மிகவும் பிற்போக்கு தனமாக இருக்கிறது.
#Bakasuran Hearing good word of mouth for this movie in South…Congrats my friend @natty_nataraj & Dir @selvaraghavan pic.twitter.com/ZXdkgpinhu
— Anurag Kashyap (@anuragkashyap72) February 19, 2023
செல்போன்கள் ஆபத்தனவை :
அதே போல பிரச்சனையை கூறும் இயக்குனர் அந்த பிரச்னைக்கு தீர்வு சொல்லவில்லை. இவற்றைவிட பெண்களை பாதுகாக்க வேண்டும் என கூறும் இயக்குனர் படத்தில் ஆபாசமான காட்சிகளையும், படலையும் வைத்திருபோது கொடுமை. படத்தில் இறுதியில் செல்வராகவன் செல்போன் போன்ற நவீன கண்டுபிடிப்புகள் ஆபத்தானவை என்றும், அதனை தெடர்ந்து பேசும் நட்டி பிள்ளைகள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். இப்படி பல பிற்போக்கு தனமான கருத்துக்களை இப்படம் கூறியதால் எதிர்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இயக்குனர் அனுராக் கஷ்யப் ட்விட் :
இந்த நிலையில் தான் பகாசூரன் படம் குறித்து பிரபல பாலிவுட் பட இயக்குனர் அனுராக் கஷ்யப் ஒரு ட்விட்டர் பதிவை இட்டுள்ளார். இவர் பாலிவுட் சினிமாவில் 75 படங்களுக்கு மேலே “இந்தியாவில் பாம்பே வெல்வெட், கெங்கஸ் ஆஃப் வசேப்பூர்” போன்ற பல படங்களை இயக்கியிருகிறார். இந்நிலையில் தான் இவர் பகாசூரன் படத்தை பற்றி ஒரு ட்விட் போட்டிருந்தார். அதில் “தென்னிந்திய சினிமாவில் வெளியான பகாசூரன் படத்தை பற்றி கேள்வி பட்டேன். என்னுடைய நண்பர் நட்டி மற்றும் இயக்குனர் செல்வராகவனுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார்.
திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் :
இவர் இப்படி பதிவிட்ட நிலையில் இயக்குனர் அனுராக்கை ரசிகர்கள் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பகாசூரன் படத்தை பார்க்காமல் கருத்து சொல்ல வேண்டாம் என்றும், படத்தை பார்க்காமலும் அதனை பற்றிய எந்த விவரம் தெரியாமலும் கருத்து பதிவிட வேண்டாம் என்றும், இந்த ட்விட் உங்களுடைய நண்பர் நட்ராஜுக்காக போடப்பட்டது போல தெரிகிறது எனவும் நெட்டிசன்கள் பலரும் இயக்குனர் அனுராக் கஷ்யப் அவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.