விஜய் – விஜய் சேதுபதி காம்போ விடுங்க. அஜித் – விஜய் சேதுபதி காம்போ குறித்து பேசிய பாலிவுட் இயக்குனர்.

0
897
vjsajit
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான இயக்குனராக விளங்கி கொண்டு இருப்பவர் இயக்குனர் அனுராக் காஷ்யப். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனுராக் காஷ்யப். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர்.

-விளம்பரம்-
Anurag Kashyap sorry for taking part in the anti-Mandal stir of ...

இவர் பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் சோக்டு என்ற வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தல அஜித், விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்தை பற்றி கூறியிருந்தார்.

- Advertisement -

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பது, நான் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. பின்னர் அது நடக்காமல் போய்விட்டது. விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டு உள்ளேன். அதோடு மாஸ், திரில்லர் காட்சிகள் கொண்ட ‘சிக்ரெட் கேம்ஸ் ‘ வெப் சீரிஸ் போன்ற திரில்லர் வெப் ஒன்றை எடுக்க போகிறேன்.

வீடியோவில் 3 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

அதில் அஜித், விஜய்சேதுபதியை நடிக்க வைக்க விரும்பிகிறேன் என்று கூறினார். விஜய், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார்கள். மேலும், இவர் நடிகர் தனுஷ்யிடம் ராமன் ராகவ் கதையை கூறி உள்ளார். அதுவும் மிஸ் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார் இயக்குனர் அனுராக் காஷ்யப்.

-விளம்பரம்-
Advertisement