தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை அனுஷ்கா. அனுஷ்கா அவர்கள் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனா உடன் இணைந்து நடித்த ‘சூப்பர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா திரை உலகிற்கு அறிமுகமானர். தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். அருந்ததி, பாகுபலி போன்ற படங்களின் மூலம் அனுஷ்கா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இன்று வரை அனுஷ்கா ரசிகர்களின் ‘தேவசேனா’ வாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது அனுஷ்கா அவர்கள் நடித்த படங்கள் ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்து வரப்படுகிறது. இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி இவர் யோகா பயிற்சி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் அனுஷ்கா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
மேலும், இவர் 15 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்காகவே அனுஷ்காவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் நடிகை அனுஷ்கா அவர்கள் டிரைவர் ஒருவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் ரெட்டி என்பவர் அனுஷ்காவின் தாராள மனம், பிறருக்கு உதவி செய்யும் குணம் குறித்த தகவல் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியது, ஜார்ஜியா நாட்டிற்கு ஒரு முறை தயாரிப்பாளர் தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் ரெட்டி சென்ற போது ஷாஷா என்கிற ரஷ்ய டிரைவரை சந்தித்து உள்ளார். அந்த ஷாஷா என்கிற ரஷ்ய டிரைவருக்கு தெலுங்கு தயாரிப்பாளர் பற்றி தெரிந்து உள்ளது. பின் ஷாஷா டிரைவர் தயாரிப்பாளர் ஷ்யாம் அவர்களிடம் நடிகை அனுஷ்கா பற்றி விசாரித்து உள்ளார். பின் நடிகை அனுஷ்கா இரண்டாம் உலகம் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்று உள்ளார்.
அப்போது அந்த ஷாஷா தான் அனுஷ்காவுக்கு கார் டிரைவராகவும், பாதுகாவலராகவும் இருந்து உள்ளார். ஒருநாள் பைனான்ஸ் பணம் கட்டவில்லை என அவரது காரை பறிமுதல் செய்து சென்று விட்டார்கள். அதனால் ஷாஷா படப்பிடிப்புக்கு போக முடியவில்லை. மறுநாள் விவரம் அறிந்த அனுஷ்கா படப்பிடிப்பு முடிந்து அங்கிருந்து கிளம்புவதற்கு முன் அந்த ஷாஷா டிரைவருக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்து விட்டு தான் இந்தியா கிளம்பியுள்ளார்.
இதை தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் ரெட்டி சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அனுஷ்காவுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் குவித்த வண்ணம் வருகின்றனர். தற்போது கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு தமிழில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சைலன்ட் என்ற படத்திலும், நிசப்தம் என்ற படத்திலும் அனுஷ்கா நடித்து வருகிறார்