அனுமதியின்றி காட்டப்பட்ட மகளின் முகம் – கோலி மனைவி அனுஷ்கா முன் வைத்த வேண்டுகோள்.

0
544
anushka
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஜோடி நீண்ட நாட்கள் காதலித்து பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். தங்களது திருமணத்திற்கு பிறகும் செல்வாக்குமிக்க ஜோடியாக திகழ்ந்த வந்தவர்கள் இந்த ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்கள். தங்களது குழந்தைக்கு வாமிகா என்று பெயர் வைத்தனர். பொதுவாக பிரபலங்கள் தங்கள் குழந்தை பிறந்து முதல் நாள் முதலே புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்துவிடுவார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-236-819x1024.jpg

விருஷ்கா மகள் வாமிகா :

ஆனால், குழந்தை பிறந்து ஒரு வருடங்கள் ஆகப் போகும் நிலையிலும் தங்களது குழந்தையின் முகத்தை எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்திலோ அல்லது புகைப்படமாகவோ வெளியிடவில்லை. இந்நிலையில் தங்களது மகளின் முகத்தை இதுவரை வெளியுலகத்திற்கு காட்டாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றினை வெளியிட்டார்.

- Advertisement -

மகள் முகத்தை காட்டாத காரணம் :

அதில் வாமிகாவின் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ இதுவரை வெளியிடாமல் இருக்கும் ஊடகங்களுக்கு நன்றி. ஒரு பெற்றோராக நாங்கள் எங்களது மகளின் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட வேண்டாம் என்று தொடர்ச்சியாக ஊடகத்துறையிடம் கேட்டுக் கொண்டிருந்தோம். அதன்படி இதுவரை எந்த ஒரு புகைப்படத்தையும் எடுக்காமல் இருப்பதற்கு நன்றி. எங்களது குழந்தை சமூக வளைதளம் மூலமாகவோ அல்லது மீடியா மூலமாகவோ அறியப்பட்டு வளரக் கூடாது என்பதற்காகவும், எங்களது குழந்தையின் வாழ்க்கை மிகவும் ஃப்ரீயாகவும், இலகுவாக அமைய வேண்டும் என்பதனாலேயே நாங்கள் இதனை தவிர்த்து வருகிறோம்.

This image has an empty alt attribute; its file name is wwww.jpg

முதல் முறையாக வெளியான மகளின் புகைப்படம் :

ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னர் அவரை நாங்கள் தடுக்க முடியாது. அதுவரை எங்களது குழந்தை குழந்தையாக வளர வேண்டும். அவருடைய பிரைவசிக்காகவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அனுஷ்கா சர்மா பதிவிட்டு ஊடகத்துறைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையிலான போட்டியின் போது கோலி மகளின் முகம் மைதானத்தில் கேமராவில் காட்டப்பட்டது.

-விளம்பரம்-

அனுஷ்கா வெளியிட்ட அறிக்கை :

அதுவும் இந்த போட்டியின் போது கோலி அரை சதம் அடித்த போது தனது குழந்தைக்காக இந்த அரை சதத்தை அர்ப்பணித்தார். இதுவரை சமூகவலைதளத்திலோ அல்லது எந்தவிதமான ஊடகத்திலோ வெளிவராத அவரது குழந்தையின் முகத்தை இந்தப் போட்டியின் போது அவர்கள் வெளிக்காட்டினர். இப்படி ஒரு நிலையில் தங்கள் மகளின் முகத்தை கேமரா மேன் தான் காட்டிவிட்டார் என்றும் தன் மகளின் புகைப்படத்தை பகிர வேண்டாம் என்று அனுஷ்கா ஷர்மா அதிரடி அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

தெரியாமல் காட்டிய கேமரா மேன் :

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘எங்கள் மகளின் புகைப்படங்கள் நேற்று ஸ்டேடியத்தில் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதை நாங்கள் அறிந்தோம். நாங்கள் இதற்கு தயாராகவில்லை என்பதையும், அங்கு கேமரா இருந்தது எங்களுக்கு தெரியாது என்பதையும் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறது. நாங்கள் முன்பே குறிப்பிட்டதைப் போல வாமிகாவின் புகைப்படங்கள் க்ளிக் செய்யப்படாமல், பகிரப்படாமல் இருந்தால் மகிழ்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement