12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.! என்ன கதை தெரியுமா.!

0
621
Madhavan-Anushka

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ரெண்டு ‘ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுஷ்கா.

இந்த படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது மீண்டும் இணைகிறது மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.
பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். 

- Advertisement -

ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. நடிகர்கள் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவுள்ளனர்.

திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமெரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் இந்த ஆண்டே வெளியாகும் என்று எதிரிபார்க்க படுகிறது.

-விளம்பரம்-
Advertisement