தெலுங்கு திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘சூப்பர்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக நாகர்ஜுனா நடித்திருந்தார். இப்படத்தில் நடிகைகள் ஆயிஷா டகியா மற்றும் அனுஷ்கா ஷெட்டி என டபுள் ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர். இது தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம் இதனைத் தொடர்ந்து சுமனின் ‘மகா நந்தி’, ரவி தேஜாவின் ‘விக்ரமார்குடு’, விஷ்ணு மஞ்சுவின் ‘அஷ்ட்ரம்’ என அடுத்தடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்தார் அனுஷ்கா ஷெட்டி.
அதன் பிறகு தெலுங்கு திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். தமிழில் 2006-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘இரண்டு’. இது தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார்.
இதையும் பாருங்க : கணவரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்வாதி. விவாகரத்து காரணமா ? அவரே வெளியிட்ட வீடியோ.
இதில் கதையின் நாயகனாக மாதவன் நடித்திருந்தார். ‘இரண்டு’ படத்துக்கு பிறகு ‘வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத் திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார் அனுஷ்கா ஷெட்டி.
இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. அனுஷ்கா ஷெட்டிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது, நடிகை அனுஷ்கா ஷெட்டி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் ரொம்பவும் ஸ்பெஷல்.
இதையும் பாருங்க : என் ராசாவின் மனசிலே படத்திற்கு முன்பாகவே டி ஆர் படத்தில் தோன்றியுள்ள வடிவேலு. புகைப்படம் இதோ.
ஏனெனில், அனுஷ்கா தனது அப்பா மற்றும் அம்மாவுடன் இப்புகைப்படத்தில் இருக்கிறார். இந்த புகைப்படத்தை ஷேரிட்டதோடு, தனது அப்பாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்லியிருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இப்போது ‘சைலன்ஸ்’ என்ற ஒரு படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இந்த படத்தினை இயக்குநர் ஹேமந்த் மதுகர் இயக்கியிருக்கிறார்.