பொது இடத்தில ரசிகன் செய்த காரியத்தால் ,கோபத்தில் போனை பிடிங்கி உடைத்த நடிகை !

0
1448
- Advertisement -

செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை வாங்கி உடைத்த நடிகையின் அட்டூழியத்தை பலரும் தாறுமாறாக விமர்சித்ததால் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார் அந்த நடிகை.

Actress Anasuya-Bharadwa

- Advertisement -

சமீப காலமாக நடிகைகள் ரசிகர்களின் மீது ஆத்திரத்தையும் கோபத்தையும் பொது வெளியில் காட்டி அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நடிகை அனுஷ்யா தெலுங்கு சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு வளறந்த நடிகை ஆவார்.

இவர் தனது உறவினர் வீட்டிற்கு ஒரு சின்ன விழாவிற்கு வந்துள்ளார்.விழா முடிந்து வீட்டிற்கு வெளியே வரும்போது அவரது ரசிகர் ஒருவர் அனுசுயாவுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

Anchor Anasuya

ஆனால் இது பிடிக்காத அனுசுயா ஆத்திரத்தில் அந்த ரசிகரின் செல் போனை வாங்கி கீழே வீசி அடித்து உடைத்துள்ளார். இந்த விஷயம் செய்தியாக பரவ, ரசிகர்கள் அனைவரும் அனுசுயாவின் ட்விட்டர் பக்கத்தில் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர் .விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத அனுசுயா, தனது ட்விட்டர் கணக்கை இழுத்து மூடிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.இந்த சம்பவத்தால் மனமுடைந்த அந்த ரசிகர் , தன் போனை உடைந்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.