தீர்ந்தது குழப்பம்..! ஜெயலலிதா வாழ்கை வரலாற்று கதாப்பாத்திரத்தில் நடிப்பது இந்த நடிகை தான்.!

0
305
jayalalitha

பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட “நடிகையர் திலகம்” என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மறைந்த முதல்வரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக்கபடவுள்ளது.

Jayaram Jayalalitha

இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் தயாரிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்த படத்தை விப்ரி மீடியா தயாரிக்க உள்ளது என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்று படத்தை இயக்குனர் பாரதி ராஜா இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகை அனுஷ்கா, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மேலும், இயக்குனர் பாரதி ராஜாவிற்கு உதவி இயக்குனர்களாக அமீர், வெற்றி மாறன் போன்றவர்கள் இந்த படத்தில் பணியாற்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

anushka shetty

ஆனால், இதை பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாக வில்லை, ஆனால், இதுவரை வந்த தகவல் அடிப்படையில் பார்க்கும் போது இயக்குனர் விஜய் தான் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை எடுக்க போகிறார் என்று யூகிக்கபடுகிறது.