நயன்தாரா உங்களுக்கு போட்டியா ? கேள்விக்கு கோபமாக பதிலளித்த பிரபல நடிகை !

0
1662
Actress-Nayanthara

தற்போதைய கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. குறுகிய காலத்தில் இவர் மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளி நடிகைகளின் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை ரசிகர்களிடம் பெற்றார்.

nayanthara

அது மட்டுமின்றி ஹீரோக்களுக்கு நிகராக நடிப்பிலும்,வசூலிலும் நிகராறாக திகழ்கிறார், இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது, அந்த அளவிற்கு முன்னுக்கு வந்துள்ளார் நயன்தாரா.

நயன்தாராவுக்கு இணையாக இருக்கும் மற்றொரு நடிகை யார் என்றால் அது அனுஷ்கா தான். நடிப்பிலும், சசிகர்கள் பட்டாளத்தில் அவருக்கு இணையாக இருக்கிறார் அனுஷ்கா. சமீபத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் மூலம் தன் திறமையை நிரூபித்துள்ளார்.

anuskha

இந்நிலையில் அனுஷ்காவிடம் நயன்தாரா உங்களுக்கு போட்டியா? என்று கேட்க அதற்கு அவர் , எனக்கு போட்டி நான் தான், நான் நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கு போட்டி நான் தான். எப்போதும் எனக்கு போட்டியாக யாரையும் நினைக்கமாட்டேன்.

பின்னர் என்னை எந்த நடிகையுடனும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அப்படி நான் சொல்வதால் இரண்டு பேருக்கும் கருத்துவேறுபாடு உண்டாகும்’ அதனால் என்னை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம் , என்று கோபமாக பதிலளித்தார்.