அன்வர் சமீரா மகனா இது ? எப்படி வளர்ந்துட்டார் பாருங்க. அப்படியே அன்வர் ஜாடை.

0
454
- Advertisement -

சமீரா மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சமீரா. இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் நடித்த சீரியலில் அன்வரின் அம்மாவும் இருந்தார். அப்போது இருந்தே அன்வரின் அம்மாவுக்கும், சமீராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின் குடும்ப நண்பர்களாக இருந்தவர்கள் சில காலங்களுக்குப் பிறகு குடும்ப உறவினர்கள் ஆகவே மாறிவிட்டார்கள்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பகல் நிலவு என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார் சமீரா. இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் அன்வர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘அப்பா என்று நீ அழைப்பதற்காகவே என் அடுத்த காத்திருப்பு’ – மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நவீன் உருக்கம்.

எளிமையாக நடந்த திருமணம் :

மேலும், இந்த சீரியலுக்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான றெக்க கட்டி பறக்குது மனசு என்ற தொடரில் சமீரா நடித்தார். அதோடு இந்த சீரியலை அன்வர்-சமீரா இருவரும் சேர்ந்து தயாரித்தார்கள்.இந்த இரு சீரியல்களுக்கு பிறகு அன்வர்– சமீரா ஹைதராபாத்தில் உள்ள சமீரா வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்தது இருந்தது.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின் இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார்கள். பின் சில வாரங்களில் இவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.அதற்கு பின் சமீரா கர்ப்பமாக இருக்கும் தகவலை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்கள். அதனால் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோ என அனைத்தையும் பதிவிட்டு வந்தார்.

சமீராவிற்கு பிறந்த மகன் :

கர்ப்பமாக இருந்த போதே இவர் விளையாடுவது, நடனமாடுவது என்று பல விடீயோக்களை பதிவிட்டு வந்தார். இதனால் பலர் இவரை திட்டி தீர்த்தனர். ஆனால், ஒரு அம்மாவாக உங்களை விட என் குழந்தை மீது அக்கறை இருக்கிறது என்று பதிலடி கொடுத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சமீராவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

சமீரா மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் :

பின் சமீரா- அன்வர் இருவரும் தங்கள் குழந்தையுடன் ஒதுக்கும் நேரத்தை வீடியோவாகவும், புகைப்படங்களாவும் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சமீரா தன் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.. இப்படி ஒரு நிலையில் சமீரா தன் மகனுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவரது மகன் நெடு நெடுவேன வளர்ந்து அப்படியே அன்வர் ஜாடையிலேயே இருக்கிறார்.

Advertisement