ஜாதகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட இந்த பரிசோதனை செய்து திருமணம் செய்ய வேண்டும் – சுஹாசினி

0
229
- Advertisement -

ஜாதகத்தை விட ரத்த பரிசோதனை செய்வது தான் ரொம்ப முக்கியம் என்று நடிகை சுகாசினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலக தலசீமியா தினத்தை ஒட்டி சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விழிப்புணர்வு நடைபெற்று இருந்தது. இதில் நடிகை சுகாசினி மணிரத்தினம் கலந்து கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுகாசினி மணிரத்தினம், தலசீமியாவை பற்றி நான் கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் தெரிந்து கொண்டேன்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை ரத்த ட்ரான்ஸ்ஃபர் பண்ணுவது ரொம்ப முக்கியம். அதே போல் பெரியவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்ய வேண்டும். நான் ஆறு மாதத்திற்கு ஒருமுறை செய்து கொண்டு தான் இருக்கிறேன். இன்று நான் தலசீமியா பற்றி பேச வந்தது தற்செயலான ஒன்று. எனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான் நடந்தது. பொதுவாகவே வீட்டில் ஜாதகம் பார்த்து திருமணம் செய்வார்கள்.

- Advertisement -

சுஹாசினி பேட்டி:

எங்களுக்கெல்லாம் சாதகம் பார்க்கவில்லை. ஒரு சில பேர் பார்ப்பார்கள். அது முக்கியம் தான். இருந்தாலும் இந்த ஜாதகம், கம்யூனிட்டி, உயரம் என பார்த்து திருமணம் செய்வதற்கு பதில் ரத்த பரிசோதனை செய்து திருமணம் செய்வது ரொம்ப முக்கியம். இது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். மாலத்தீவுகளில் எல்லா ஆண், பெண்ணுக்கும் ரத்தப் பரிசோதனை செய்த பிறகு தான் திருமணமே செய்து வைப்பார்கள். அதேபோல் தலசீமியாவை குறித்து நிறைய தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள்.

தலசீமியா குறித்து சொன்னது:

அது எல்லாம் நம்பாமல் மருத்துவர்கள் சொல்லுவதை பின்பற்றுங்கள். நம்முடைய முன்னோர்கள், ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டு நாம் எப்படி நடந்தோமோ அதே போல் இனி நம் வாழ்க்கையை, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவர்கள் சொல்வதைப் பற்றி கேட்டு நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது சுஹாசினி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஹாசினி.

-விளம்பரம்-

சுஹாஷினி குறித்த தகவல்:

தற்போது இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குனர் சாருஹாசனின் மகள் அவர். மேலும், இவரது அப்பாவின் சகோதரர் உலக நாயகன் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழும் மணிரத்தினத்தின் மனைவி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

suhashini

சுஹாசினி திரைப்பயணம்:

குறிப்பாக, நடிகை சுஹாசினி 2003ஆம் ஆண்டு வெளியான “stumble” என்ற ஆங்கில படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்த வந்த சுஹாசினி 80ஸ் களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தார். தற்போது கூட மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல நிகச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார்.

Advertisement