‘குழந்தைய வச்சி பிச்ச எடுக்கற, Worst அம்மா’ – எல்லை மீறிய கமெண்ட்டுகளால் பொறுமையை இழந்த சமீரா.

0
453
sameera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்தது. இந்த தொடரில் நடித்த அன்வர்- சமீரா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்கள். 700-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தொடரில் இருந்து அன்வர் மற்றும் சமீரா ஜோடி வெளியேறினார்கள். மேலும், அன்வர்– சமீரா அவர்கள் நவம்பர் 11ஆம் தேதி மாலை பௌர்ணமி நிலவில் இருவரும் மணம் முடித்து தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள்.

-விளம்பரம்-

ஹைதராபாத்தில் உள்ள சமீரா வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்தது. பகல் நிலவு சீரியலுக்கு பின் சமீரா ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ என்ற தொடரை தயாரித்து அதில் ஹீரோயினியாகவும் நடித்து இருந்தார். பின் அந்த சீரியலும் முடிவு பெற்றது. அதற்கு பின் சமீரா எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இருந்தாலும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்தார். பிறகு தான் கர்ப்பமாக இருந்ததை அறிவித்து இருந்தார். அதற்கு பின் சமீரா அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.

- Advertisement -

சமீரா யூடூயூப் சேனல் :

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் போலோ செய்கிறார்கள். மேலும், சமீரா அவர்கள் தனியாக யூடூயூப் சேனல் ஒன்றை துவங்கி ரீல்ஸ் வீடியோ, தன் குடும்பத்துடன் எடுத்து கொண்ட வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பின் இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதனை சமீராவின் கணவர் அன்வர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். இவர்கள் மகனுக்கு Syed Arhaan என்று பெயர் இருக்கிறார்கள். மேலும், சமீரா யூடுயூப் பக்கத்தில் தன் குழந்தையின் Vlog வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதில் பலரும் பாசிட்டிவான கமெண்டுகளை கூறி இருந்தாலும் சிலர் சமீராவை விமர்சித்து கடுமையாகப் பேசி இருக்கிறார்கள்.

சமீரா abusing கமெண்ட்ஸ்:

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீரா பதிவு போட்டிருக்கிறார். abusing நெகட்டிவ் கமெண்ட்டுகளை நிறுத்தியாக வேண்டும் என்பதற்காகத்தான் சமீரா பதிவிட்டிருக்கிறார். அதில் ஒருத்தர், இந்த யூடியூபர்ஸ் பிள்ளைகளை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். இவங்க எல்லாம் ரொம்ப மோசமான தாய்மார்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு சமீரா, ஒரு அம்மாவை பார்த்து எப்படி உங்களால் இப்படி சொல்ல முடியுது. நான் என் மகனை நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி வீடியோ பதிவுகள் எல்லாம் ஒரு மெமரிக்காக தான் பண்ணுகிறோம்.

-விளம்பரம்-

விளக்கம் கொடுத்த சமீரா:

இது ரசிகர்கள்,நண்பர்களுக்காக தான் செய்கிறோம். நாங்கள் நிறைய நெகட்டிவ் கமெண்டுகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என்று தான் இருந்தோம். ஆனால், இப்போ ரொம்ப abusing கமெண்ட்கள் வந்துகொண்டிருக்கிறது. அதை நாங்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கிறோம். இதைத்தொடர்ந்து அனுப்பி இருந்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்வோம். இதை தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் சிலர் நீங்கள் ரொம்ப மோசமான பெற்றோர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

சைபர் கிரைம் போலீசில் புகார்:

நாங்கள் நல்ல பெற்றோர்கள் தான். இது ஏற்கனவே எடுத்த வீடியோ இப்பதான் நாங்கள் வெளியிடுகிறோம். எங்களுடைய பழைய நினைவுகளுக்காக தான் இதை பண்ணுகிறோம். வீடியோ போட்டு தான் சம்பாதிக்கும் என்ற அவசியம் இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் நாங்க அப்பவே சோசியல் மீடியாவில் போட்டிருப்போம். தயவுசெய்து இந்த மாதிரி கமெண்ட் செய்வதை நிறுத்துங்கள். மேலும், கமெண்ட் செய்யும் போது ஒருவர் மனதை புண்படாமல் யோசித்து போடுங்கள். மீண்டும் மோசமாக கமெண்ட்ஸ் வந்தால் நாங்கள் கண்டிப்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிப்போம் என்று சமீரா பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement