ஆர்யா – ஷாயிஷா கல்யாணம்.! எங்க வீட்டு மாப்பிளை அபர்னதி சொன்ன புதிய ஷாக்.!

0
1760
arya-Sayyeshaa

கலர்ஸ் தொலைக்காட்சியில்ல் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சி ஒன்று துவங்கியது இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெரும் நபரை ஆர்யா திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று அறிவித்திருந்தனர்.ஆனால், இறுதி போட்டியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் டிமிக்கு கொடுத்தார் ஆர்யா. 

இந்நிலையில் ஆர்யா மற்றும் சயீஷா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக ஆர்யா மற்றும் சயீஷாவின் திருமணம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆர்யா, எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் அபர்னத்தியை தான் திருமணம் செய்துகொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கபட்டது. அதே போல அபர்னதியும் மற்ற போட்டியார்களை விட ஆர்யா மீது பெரும் காதல் கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஆர்யா மற்றும் சயீஷா திருமணம் குறித்த செய்தி பற்றி அபர்ணதியிடம் கேட்கப்பட்ட போது, ஆர்யாவிடம் சயீஷா காதல் குறித்து இப்போதே
ஆர்யாவிடம் கேட்டேன் அதெல்லாம் வதந்தி என்று கூறிவிட்டார்.

-விளம்பரம்-

அதனால் ஆர்யா திருமணம் என்று வருவது எல்லாம் வதந்தி என்று தான் தோன்றுகிறது, அப்படி உண்மையாக இருந்தால் என்ன செய்வது வேறு வழியில்லை அவரை ஏற்றுக்கொண்டு போக வேண்டியது தான். ஆனால், அவருக்கு கல்யாணம் ஆகப்போவது என்று நினைத்தால் எனக்கு மிகவும் வருத்தமாகத் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisement