அப்பா படத்தில் வந்த கேபிய தெரியும். இந்த பொண்ண ஞாபகம் இருக்கா ? இப்போ எப்படி இருகாங்க பாருங்க.

0
788
YuvaLakshmi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக மாறி உள்ளார் யுவஸ்ரீ லக்ஷ்மி. இவர் அமலாபால் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அம்மா கணக்கு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அம்மா கணக்கு. இந்த படத்தில் அமலா பாலுக்கு மகளாக யுவஸ்ரீ நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Image

தன்னுடைய முதல் படத்திலேயே யுவஸ்ரீ மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். மேலும், யுவஸ்ரீ காரைக்காலை சேர்ந்தவர். இவர் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்போதே பார்வை எனும் குறும் படத்தில் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த குறும்படத்தை பார்த்து சமுத்திரக்கனி அவர்கள் அம்மா கணக்கு என்ற படத்தில் நடிக்க வைத்தார். இதனைத் தொடர்ந்து யுவஸ்ரீ அப்பா, காஞ்சனா 3 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாள மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த அனைவரும் அமலாபாலுடன் நடித்த நடிகையா! இவர் என்று வியப்பில் கேட்டு வருகின்றனர். தற்போது யுவஸ்ரீ லக்ஷ்மி ‘நினைவெல்லாம் நீயடா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is image-2.png

இந்நிலையில் யுவஸ்ரீ நினைவெல்லாம் நீயடா படக்குழுவுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பலரும் இவர் யுவஸ்ரீயா! அமலாபாலுக்கு மகளாக நடித்த யுவஸ்ரீயா! தற்போது இவர் நன்றாக வளர்ந்து விட்டாரே என்று கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். அதேபோல் இவருடன் அப்பா படத்தில் நடித்த கேப்ரியல்லா பிக் பாஸ், பிபி ஜோடிகள் என சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement