கேபிக்கு கிடைக்காத சினிமா வாய்ப்பு, கதர் படத்தில் நாயகியான அப்பா பட பிரபலம் – ப்பா, எப்படி இருக்காங்க பாருங்க.

0
390
yuvashree
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக மாறி உள்ளார் யுவஸ்ரீ லக்ஷ்மி. இவர் அமலாபால் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அம்மா கணக்கு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அம்மா கணக்கு. இந்த படத்தில் அமலா பாலுக்கு மகளாக யுவஸ்ரீ நடித்திருந்தார்.

-விளம்பரம்-

தன்னுடைய முதல் படத்திலேயே யுவஸ்ரீ மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். மேலும், யுவஸ்ரீ காரைக்காலை சேர்ந்தவர். இவர் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்போதே பார்வை எனும் குறும் படத்தில் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த குறும்படத்தை பார்த்து சமுத்திரக்கனி அவர்கள் அம்மா கணக்கு என்ற படத்தில் நடிக்க வைத்தார். இதனைத் தொடர்ந்து யுவஸ்ரீ அப்பா, காஞ்சனா 3 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

நாயகியாக மாறிய யுவஸ்ரீ :

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாள மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த அனைவரும் அமலாபாலுடன் நடித்த நடிகையா! இவர் என்று வியப்பில் கேட்டு வருகின்றனர். தற்போது யுவஸ்ரீ லக்ஷ்மி ‘நினைவெல்லாம் நீயடா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கதிர் , மாஸ்டர் மஹிந்திரன் படம் :

இதை தொடர்ந்து இயல்வது கரவேல் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் யுவஸ்ரீ. எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.எல்.எஸ். ஹென்றி என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தில் கதீர் மற்றும் மாஸ்டர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

கேபிக்கு கிடைக்காத சினிமா வாய்ப்பு :

சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக இந்த படம் உருவாகி வருகிறது. இவரை போலவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கேபியும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் ஹீரோயினாக ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சினிமா வாய்ப்புகள் சரி வர அமையவில்லை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வருகிறார்.

Advertisement