தமிழ் நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் – அப்பு குட்டி நடிக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ படத்தின் டீஸர்

0
243
- Advertisement -

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் வகையில் அப்புக்குட்டி நடிப்பில், ராஜூ சந்ரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ராஜு சந்ரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். இதற்கு முன் மலையாளத்தில் ‘ஐயெம் ஏ பாதர்’ , ‘ஜிம்மி இ வீட்டில் ஐஸ்வர்யம்’ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் படத்தில் மலையாளி ஆனா ‘ஐஸ்வர்யா அனில்’ அறிமுகம் ஆகியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஸ்ரீஜா ரவி மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னொரு முக்கிய வேடத்தில் ரோஜி மாத்யூ நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் சுவாமிநாதன், ராகந்த், மிமிக்ரி பாபு, வினோ அச்சுதன், அமித் மாதவன், விஷ்ணு உள்ளிடோர் நடித்துள்ளனர். மேலும் பிறந்தநாள் வாழ்த்துகள் படத்தின் இணை இயக்குனர் பினு பாலன், இசையமைப்பாளர் ஜி கே வி மற்றும் சென்னையை சேர்ந்த ‘பிளான் 3 ஸ்டுடியோ’ தயாரிக்கும் முதல் தமிழ் படமும் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகும்.

- Advertisement -

அப்பு குட்டி குறித்து:

‘தம்பி மயில்வாகனம்’ என்ற டயலாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அப்பு குட்டி. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் அப்பு குட்டியும் ஒருவர். இவருடைய உண்மையான பெயர் சிவ பாலன். இவர் வெண்ணிலா கபடி குழு, சாமியின் குதிரை போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘அழகர்சாமியின் குதிரை’. இந்தப் படத்திற்காக இவர் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி சம்பவம்:

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இருந்திருக்கும் சம்பவம் தான் ஒட்டுமொத்த தமிழகத்தையே புரட்டிப்போட்டு இருக்கிறது. சில பேர் உயிர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருந்தார்கள். அதில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் தான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று விசாரணையில் தெரிந்தது. மேலும், காவல்துறை பொறுப்பு இல்லாமல் இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

-விளம்பரம்-

பிரபலங்கள் கண்டணம்:

இதனால் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தது. இந்த விவாகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் தமிழக அரசை கண்டித்தும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதும் நாம் அறிந்ததே.

Advertisement