தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஏ ஆர் முருகதாசும் ஒருவர். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் படத்தின் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார், தர்பார் போன்ற பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவர் படங்களை இயக்குவது மட்டும் இல்லாமல் தயாரித்தும் வருகிறார். மேலும், ஒரு இல்லாமல் இடைவெளிக்கு தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மதராசி. இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் குறித்த தகவல்:
ஏ.ஆர்.முருகதாஸ் குறித்த தகவல்: இவர்களுடன் இந்த படத்தில் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் சபீர் இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது., மேலும் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி:
இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியில் ஏஆர் முருகதாஸிடம் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதில் ஏ.ஆர் முருகதாஸ்,

பிரபலங்கள் பற்றி சொன்னது:
விஜய்- விஜய் சார் பொறுத்தவரை என்னிடம் சினிமா சம்மந்தமாக மட்டும் தான் பேசுவார். மற்ற நடிகர்களை பற்றி எதுவுமே பேச மாட்டார்.
அஜித்- அஜித் சார் என்னிடம் சினிமா பற்றி பேசவே மாட்டார். சினிமாவை தவிர மற்ற எல்லா விஷயங்களையும் சொல்லுவார்.
ரஜினி- ரஜினி சார் உடன் பேசினால் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கமல் மற்றும் பாலச்சந்தர் பற்றி பேசிக் கொண்டிருப்பார் என்று கூறியிருந்தார்.






