தர்பார் தோல்விக்கு காரணம் ரஜினி தான் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற சிறை பாதுகாப்பு அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் கைதியை மீட்பது தான் இந்த படத்தின் கதை.
ஜெயிலர் படம்:
மேலும், இந்த படம் பேன் இந்திய படமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உட்பட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மூன்றாவது முறையாக அனிருத்- ரஜினிகாந்த் இந்த படத்தில் இணைவதால் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
@/ARMurugadoss accepting his mistake about wat he did in his previous movie #Darbar
— Rohith kanna (@Rohithkanna113) April 3, 2023
He knw his mistakes veryy well ini idhu repeat agadhu those who say #armurugadoss is outdated he'll prove them wrong💯
SK – ARM combo will be massive for sure ! #Maaveeran #SK #Sivakarthikeyan pic.twitter.com/bf8USIDigZ
ஏ ஆர் முருகதாஸ் அளித்த பேட்டி:
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் ரஜினி குறித்து பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் தர்பார் படத்தின் தோல்வி குறித்து கூறியது, ரஜினி சார் என்னிடம் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஏன்னா, அந்த நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் அவர் கட்சி தொடங்குவதாக இருந்தது. அதோடு நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். அதனால் இந்த பட வாய்ப்பு இழக்கக்கூடாது என்று அவர் சொன்ன நேரத்தில் படத்தை எடுத்தேன்.
தர்பார் பட தோல்விக்கு காரணம்:
அதுமட்டுமில்லாமல் அது ரஜினிகாந்தின் கடைசி படம் என்றும் பேசப்பட்டது. மார்ச்சில் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதனால் இந்த படத்தை மிஸ் பண்ண கூடாது என்றும், ஹிட் கொடுக்க வேண்டும் என்றும் விரும்பினேன். அதுதான் நான் செய்த தவறு. சரியான திட்டமிடல் இல்லை என்பதால் தான் படத்திற்கு தோல்வி என்று நினைக்கிறேன். சரியான திட்டமிடல் இல்லை என்றால் தவறாக முடியும் என்பது புரிந்து கொண்டது என்று கூறினார் .
தர்பார் படம்:
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் தான் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் செட்டி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின்னர் ஏ ஆர் முருகதாஸ் எந்த படமும் இயக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.