நஷ்ட ஈடு கேட்டு மிரட்டறாங்க. பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்..

0
2417
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி வருகிறார். இவர் முதன் முதலாக அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானர். அதனை தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு,கத்தி,சர்கார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தின் வசூல் குறைவாக உள்ளது என படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்கள், ஏ ஆர் முருகதாஸ் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று குற்றம் சாட்டி உள்ளார்கள். தர்பார் படத்தில் வில்லனாக சுனில் ஷெட்டி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்.

- Advertisement -

இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். மேலும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்து உள்ளார். அதோடு படத்தின் ஒவ்வொரும் பாடலும் சும்மா கிழி தான். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்நிலையில் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் போதுமான வசூலை ஈட்ட வில்லை என்று சில விநியோகஸ்தர்கள் கூறி வருகிறார்கள். இதற்கு ஏ ஆர் முருகதாஸ் இடம் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு உள்ளார்கள்.

மேலும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று முருகதாஸையும், ரஜினிகாந்த் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் விநியோகஸ்தர்கள். அப்போது இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்காக ஏ ஆர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதையடுத்து வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று விநியோகஸ்தர்கள் கூறியுள்ளார்கள்.

-விளம்பரம்-

தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி தன்னை மிரட்டுவதால் தனது வீடு மற்றும் அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மனு அளித்து உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அப்போ, தர்பார் படம் ஓடலையா?? என்று ரசிகர்களிடையே கேள்வியும் எழுந்து வருகிறது.

Advertisement