சர்கார் பாணியில் ரஜினியின் அடுத்த படம்..!இயக்குனர் இவர் தான்…!

0
67
Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் “2.0” படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது “பேட்ட ” படத்தின் படப்பிடிப்பில் பங்குபெற்று வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

Rajinimurugadoss

இதனையடுத்து முருகதாஸின் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.இந்த படம் இந்திய அளவில் உள்ள அரசியல் பிரச்சினையை மையப்படுத்தியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற

சமீபத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படம் நடைமுறை அரசியலை தோலுரித்து காட்டியதால் பல்வேறு அரசியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்தது. இந்த பிரச்னையில் நடிகர் ரஜினிகாந்தும் சர்கார் படத்திற்க்கு ஆதரவாக பேசி இருந்தார்.

இந்நிலையில் தனது படங்கள் மூலம் மக்கள் சமூகப் பிரச்சனைகளை துரிதமாக திரையில் கொண்டு வரும் திறமைமிக்க இயக்குனரான ஏ ஆர் முருகதாஸுடன், ரஜினி கைகோர்க்க இருப்பதால் இது போன்ற கதைகள் மூலம் ரஜினியின் அரசியல் வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்றும் சினிமா வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.