சினிமாவில் வந்த மியூசிக்கை சீரியல்ல எடுத்து போட்டதால் ஏற்பட்ட பிரச்சனை – ஏ ஆர் ரஹ்மான் ஆதங்கம்.

0
744
- Advertisement -

சீரியலில் கிரெடிட் இல்லாமல் என்னுடைய மியூசிக் பயன்படுத்துகிறார்கள் என்று மன வருத்தத்துடன் ஏ ஆர் ரகுமான் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ. ஆர். ரகுமான். இவர் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான்.

-விளம்பரம்-

இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். மேலும், மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டு சென்றவர் ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதோடு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

- Advertisement -

ஏ.ஆர்.ரகுமான் இசைப்பயணம்:

சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் ரகுமான். மேலும், கடந்த ஆண்டு இறுதியில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றும் படங்கள்:

இதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் நடிப்பில் வெளியாகிருக்கும் பத்து தல படத்திலும் இசைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஏ ஆர். ரகுமான் அவர்கள் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் அயலான், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்திற்கும் இசையமைக்கிறார். இது மட்டும் இல்லாமல் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்க இருக்கும் புது படத்திலும் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் ஓப்பந்தம் ஆகியிருக்கிறார்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமானின் ஒரிஜினல் ஸ்கோர்:

இப்படி 30 வருடங்களுக்கு மேலாக இசைத்துறையில் பயணிக்கும் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய படங்களின் ஓ எஸ் டி எனப்படும் ஒரிஜினல் பின்னணி இசையை வெளியிடாமல் இருந்திருக்கிறார். கடந்த வருடம் நவம்பர் மாதம் தான் 99 சாங்ஸ், வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் 1 உள்ளிட்ட படங்களின் பின்னணி இசையை வெளியிட அவர் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், வெந்து தணிந்தது காடு மற்றும் கோச்சடையான் படங்களின் பின்னணி இசையின் மாஸ்டர் காப்பி உரிய மியூசிக் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று கூறி இருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், சமீபத்தில் தான் கோச்சடையான் படத்தின் ஓ எஸ் டி வெளியிட்டேன். ஏன் இவ்வளவு தாமதம் என்றால், மணிரத்தினம் சார் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சீரியலில் கிரிடிட் இல்லாமல் என்னுடைய இசையை பயன்படுத்துகிறார்கள். எந்த ஒரு கிரிடிட்டும் இல்லாமல் வருவது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரிஜினல் ஸ்கோர் சிஸ்டம் வரும் வரைக்கும் ரிலீஸ் பண்ண வேண்டாம் என்று நினைத்தேன். இப்போதெல்லாம் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அது, இது என்று மாற்றுகிறார்கள். பெயர் தப்பாக போடுகிறார்கள். இந்த பயத்தினால் தான் நான் ரிலீஸ் பண்ணாமல் இருந்தேன் என்று கூறியிருக்கிறார்

Advertisement