சுந்தரி கேபிரில்லாவை தொடர்ந்து சமையல் மந்திரன் ஆங்கரை பாலோ செய்யும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் – யாருன்னு நீங்களே பாருங்க.

0
533
arrahman
- Advertisement -

விஜய் டிவி சீரியல் நடிகையை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பாலோ செய்யும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதே போல அந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக திகழ்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் முடிவடைந்த சீரியலில் ஒன்று வேலைக்காரன். இந்த சீரியல் முத்து படத்தின் ரீமேக் வெர்சன் என்றெல்லாம் பலரும் கலாய்த்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரில் வேலன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சபரியும், வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் கோமதி ப்ரியாவும், விசாலாட்சி என்கிற கதாபாத்திரத்தில் மலையாள சினிமா நடிகை சோனா நாயர் , ராகவன் என்கிற கதாபாத்திரத்தில் சத்யாவும் நடித்திருந்தார்கள். ஆரம்பத்தில் இந்த சீரியல் மெதுவாக சென்றது. அதன் பின் பல திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. மேலும், இந்த சீரியலில் வில்லி கனகா ரோலில் சீரியல் நடிகை திவ்யா மிரட்டியிருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : விமானத்தில் திடீரென்று மயங்கிய பயணி – சிகிச்சை அளித்து காப்பாற்றிய தமிழிசை சவுந்தரராஜன். குவியும் பாராட்டுக்கள்.

வேலைக்காரன் சீரியல்:

இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை திவ்யா அவர்கள் சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவிற்கு அறிமுகமாகி இருந்தார். தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருடைய இன்ஸ்டாகிராம் வீடியோவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.

-விளம்பரம்-

சீரியல் நடிகை திவ்யா:

விதவிதமான கான்செப்ட் உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் ரில்ஸ் வீடியோக்களை எல்லாம் இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தினம் ஒரு திருக்குறள் என்கிற தலைப்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிடுகிறார். ஈசியான வழியில் திருக்குறள் குழந்தைகளை சென்றடையும் என்ற நோக்கில் திவ்யா இதை தவறாமல் செய்து வருகிறார். இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

திவ்யா இன்ஸ்டா :

ஒருமுறை, இதை பார்த்த மறைந்த நடிகர் விவேக் கூட திவ்யாவை போனில் வாழ்ந்திருந்தார். இந்த நிலையில் திவ்யாவின் இன்ஸ்டாவை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பாலோ செய்யும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, திவ்யாவின் இன்ஸ்டா பக்கத்தை ஏ ஆர் ரகுமான் பாலோ செய்கிறார். இதை திவ்யா பதிவிட்டு, மிகப் பெருமை, ஆச்சரியம், நன்றியுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

திவ்யா இன்ஸ்டாவை பாலோ செய்யும் ஏ.ஆர். ரகுமான்:

திவ்யா ஒரு நடிகை என்பதை எல்லாம் தாண்டி அவர் தமிழ் மீதும், திருக்குறளின் மீதும் கொண்டிருக்கும் ஆர்வம் தான் ஏ ஆர் ரகுமானை கவர்ந்து என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இசை ஜாம்பவான் ஏ.ஆர். ரகுமான் இன்ஸ்டாவில் பாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை வெறும் 158 பேர் தான். அவர் முக்கியமான நபர்களை மட்டுமே தான் பாலோ செய்வார். அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இன்ஸ்டாவில் சமீபத்தில் கூட சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லாவை பாலோ செய்திருந்தார். தற்போது அந்த வரிசையில் நடிகை திவ்யா இணைந்திருக்கிறார்.

Advertisement